அக்னிப்புரட்சி இன்றைய (26.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.08.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥 தமிழக மருத்துவ மாணவர்  சேர்க்கையில்  அனைத்து இந்திய ஒதுக்கீடு  இடங்களில்   EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்) வகுப்பினருக்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புகை இன்றி நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அது சட்டத்திற்கு புறம்பானது எனவும்  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதே நேரத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

* மணிப்பூர் ஆளுநராக வரும் 27 ஆம் தேதி பதவியேற்கிறார் இல.கணேசன்

💥 செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு  செய்வதை கட்டாயமாக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு.

வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்.

💥 அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை - ஆனந்தம் யூத் பவுன்டேசனுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு.

சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

* திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு  'கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி' என பெயர் சூட்டப்படும்
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

* தஞ்சாவூர், மயிலாடுதுறை, தேனியில் அரிசி ஆலைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

💥 இசைக்கு தடை! ஆப்கானித்தானில் "இசைக்கு" தடை விதிக்கப்படும்.

இசுலாம் மதத்தில் "இசை" என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் பெண்கள் ஒரு ஆண் துணையுடன் பயணம் செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

பெண்கள் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும்; ஆனால் இசாப்(Hijab) அணிவது கட்டாயம்.
- தாலிபான் செய்தித் தொடர்பாளர்

💥 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

* சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு

* கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலை. உடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.

கல்வியில் புரட்சி செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா; அவரின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலையை அண்ணாமலை பல்கலை. உடன் இணைக்கிறார்கள் - வெளிநடப்பு செய்த பின்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி.

* திமுக அரசு காழ்ப்புணர்ச்சி கிடையாது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்குமா?

இந்த அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படவில்லை - சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

* நாகையில் உள்ள மீன்வளப் பல்கலை., சென்னையில் உள்ள இசைப் பல்கலை ஆகியவை ஜெயலலிதா பெயரில்தான் இயங்கிவருகிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி விளக்கம்.

💥 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு.

காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழப்பு - பலர் காயம் என முதல்கட்ட தகவல்.

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேருக்கு கொரோனா உறுதி.

1,816 பேர் குணமடைந்த நிலையில் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

💥 காபூல் விமான நிலையத்திற்கு அருகே 2வது வெடிகுண்டு தாக்குதல்.

2வது தாக்குதல் காபூல் விமான நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

* திருச்செந்தூர் திருக்கோயில் ஆவணி திருவிழா 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை . கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

💥 அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் அதிமுக முதல்வர்கள் படம்

மாற்றுவதற்கு 13 கோடி செலவு செய்வதை மாணவர் நலனுக்கு செலவிடலாம் என கூறி அவர்கள் படமே இருக்கட்டும் என பெருந்தன்மையுடன் முதல்வர் முக ஸ்டாலின் விட்டுக்கொடுத்தார்
- : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages