அக்னிப்புரட்சி இன்றைய (30.08.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 டோக்கியோ பாராலிம்பிக்ஸ்:
10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம்.
💥 இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி.
டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா.
💥 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹152 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ₹4,488-க்கும், ஒரு சவரன் ₹35,904-க்கும் விற்பனை.
💥 ஈட்டி எறிதல் - இரட்டை பதக்கம்:
டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம்.
ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலமும் வென்றனர்.
💥 யூரியா, டிஏபி உரங்களின் தேவைகள் அதிகரித்துள்ளன; ஆகவே, தமிழ்நாட்டிற்கு உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வேண்டும்- மத்திய உரத்துறை அமைச்சருக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்.
💥 கொரோனா மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி, ஆக்சிஜன் தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கான சுங்கவரி விலக்கு கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு.
💥 நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்.
💥 செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மனநல பரிசோதனை.
அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு சரியாக பதிலளித்ததால், மனநல பாதிப்பில்லை என சான்றிதழ்.
💥 வெளிநாடுகளில் செவிலியர், ஓட்டுநர், சமையல்காரர், வீட்டுவேலை, எந்திர இயக்குநர் போன்ற வேலைகளில் சேர வேண்டுமா?
044-22505886 / 044-22502267 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.
தமிழக அரசு அறிவிப்பு
💥 மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்.
முதலமைச்சர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிய, விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா. விருது வழங்கப்படுகிறது: கோவை விஜயா பதிப்பகம் அறிவிப்பு
💥 இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.
68.55மீ ஈட்டி எறிந்து புதிய உலக சாதனையை படைத்தார் இந்திய வீரர்.
💥 பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!
கேரளாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேராளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இருக்கும் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு செல்லாமல் இணைய வழியில் தொடர்ந்து கல்வி கற்க கொழுமைத்துறை தமிழக அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
💥 மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
💥 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு பதக்கம் இல்லை என அறிவிப்பு.
தொழில்நுட்ப பிரிவின் முடிவின் அடிப்படையில் பதக்கம் திரும்பப்பெறப்பட்டதாக தகவல்.
வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட வினோத் குமாரின் பதக்கம் பறிப்பு.
* பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
💥 செப். 1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகள் செயல்படும் - தமிழக அரசு
ஞாயிற்று கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
💥 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை.
சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை.
நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி.
வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் மரியன்னை பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை - தமிழக அரசு.
💥 சங்கரன்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முத்துசெல்வி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
💥 கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்.
கோயம்புத்தூரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகைக்கடைகள், துணிக்கடைகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை.
- மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு.
💥 சென்னையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
No comments:
Post a Comment