MBC இடஒதுக்கீட்டை ஆக்கிரமித்தது யார்?" - கட்டுக்கதைகளை தகர்க்கும் உண்மைகள்! - Agnipuratchi

MBC இடஒதுக்கீட்டை ஆக்கிரமித்தது யார்?" - கட்டுக்கதைகளை தகர்க்கும் உண்மைகள்!

Share This

"MBC இடஒதுக்கீட்டை ஆக்கிரமித்தது யார்?" - கட்டுக்கதைகளை தகர்க்கும் உண்மைகள்!

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால், 115 சாதிகளுக்கு பாதிப்பு என்று 'இல்லாத ஒரு கட்டுக்கதையை' உருவாக்க முயல்கிறார் காசிமாயன் IRS எனும் நபர்.

புதுதில்லியில் இருந்து செயல்படும் இந்த நபர், பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். ஆனால், 'புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுங்கள்' என்பது போல, முத்தரையர், மீனவர், வண்ணார், போயர்-ஒட்டர், தொட்டியநாயக்கர், வலையர், ஊராளிக் கவுண்டர் போன்ற சாதிகளை, 'வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்' என்று தூண்டுகிறார்.

வன்னியர்களுக்கு எதிரான வன்மத்துடன் வெறிபிடித்து அலையும் முற்போக்கு வேடதாரி கும்பலை சேர்ந்தவர்களும் காசிமாயன் IRS உடன் சேர்ந்து, வன்னியர்களை ஒரேயடியாக ஒழித்துவிடலாம் என்றும் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கேடான எண்ணம் ஒருநாளும் ஈடேறாது!

MBC பட்டியலில் கிடைத்த 20% இடஒதுக்கீட்டில்  எந்த சாதிக்கு எத்தனை விழுக்காடு கிடைத்தது என்கிற புள்ளிவிவரத்தை வெளியிட்டால், இப்படி போராடத் தூண்டுகிறவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்!

இந்த புள்ளிவிவரங்களை கேட்டுதான் மருத்துவர் அய்யா போராடினார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டும், நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.

-------------
1970 சட்டநாதன், 1984 அம்பசங்கர் ஆணையங்களின் படி சமூகங்களின் நிலை (ஒரு ஒப்பீடு)
-------------

தற்போது MBC & DNC பிரிவில் உள்ள அம்பலக்காரர், வலையர், போயர்-ஒட்டர், பருவதராஜகுலம் ஆகிய சாதியினர் மிக மிக பின் தங்கியவர்களாகும். ஆனால், BC பிரிவில் மட்டுமல்லாமல், MBC & DNC பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ள கள்ளர், மறவர் பிரிவினர் ஒப்பீட்டளவில் முன்னேறியவர்கள் ஆகும்.  இதனை 1970 சட்டநாதன், 1984 அம்பசங்கர் ஆணையங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. அந்த விவரங்கள் கீழே:

# பிரிவு 1: தற்போது MBC & DNC பிரிவில் உள்ள அம்பலக்காரர், வலையர், போயர்-ஒட்டர்,  பருவதராஜகுலம் - 1971ல் மக்கள் தொகை சுமார் 18 லட்சம்.

# பிரிவு 2: தற்போது BC, MBC & DNC பிரிவில் பிரிவில் உள்ள கள்ளர், மறவர் - 1971ல் மக்கள் தொகை சுமார் 18 லட்சம்.

-------------
பிரிவு 1:  அம்பலக்காரர், வலையர், போயர்-ஒட்டர்,  பருவதராஜகுலம் (சமூக, கல்வி நிலை)

1. மக்கள் தொகையில் - 50% (18 லட்சம் பேர்)

2. 1970-ல் பொறியியல் படிப்பில் சேர்ந்தோர்  - 33% (5 பேர்)

3. 1970-ல் மருத்துவ படிப்பில் சேர்ந்தோர்  - 7% (2 பேர்)

4. 1970-ல் தலைமைச் செயலக பணியாளர்கள் - 15% (8 பேர்)

5. 1970-ல் 36 துறைகளின் பணியாளர்கள் - 11% (186 பேர்)

6. 1981 - 84-ல் பொறியியல் படிப்பில் சேர்ந்தோர்  - 23% (30 பேர்)

7. 1981 - 84-ல் மருத்துவபடிப்பில் சேர்ந்தோர்  - 26% (21 பேர்)

-------------
பிரிவு 2: கள்ளர், மறவர் (சமூக, கல்வி நிலை)

1. மக்கள் தொகையில் - 50% (18 லட்சம் பேர்)

2. 1970-ல் பொறியியல் படிப்பில் சேர்ந்தோர்  - 67% (10 பேர்)

3. 1970-ல் மருத்துவ படிப்பில் சேர்ந்தோர்  - 93% (28 பேர்)

4. 1970-ல் தலைமைச் செயலக பணியாளர்கள் - 85% (46 பேர்)

5. 1970-ல் 36 துறை பணியாளர்கள் - 89% (1556 பேர்)

6. 1981 - 84-ல் பொறியியல் படிப்பில் சேர்ந்தோர்  - 77% (103 பேர்)

7. 1981 - 84-ல் மருத்துவபடிப்பில் சேர்ந்தோர்  - 74% (61 பேர்)

-------------
(இவை அம்பலக்காரர், வலையர், போயர்-ஒட்டர், பருவதராஜகுலம் மற்றும் கள்ளர், மறவர் சமூகங்களுக்கு இடையேயான ஒப்பீடு ஆகும்)

மேற்படி புள்ளிவிவரங்களின் படி, 1970 - 1984 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, கள்ளர், மறவர் பிரிவினரின் முன்னேற்ற நிலைக்கு ஈடாக, அம்பலக்காரர், வலையர், போயர்-ஒட்டர், பருவதராஜகுலம் பிரிவினர் பாதி அளவு கூட முன்னேற்றம் அடையவில்லை என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.

MBC பிரிவில் உள்ள அனைத்து சமுதாயங்களை விடவும் மேலான சமூக - பொருளாதார நிலையில் கள்ளர், மறவர் சமுதாயங்கள் இருந்துள்ளதாக சட்டநாதன அறிக்கையிலும் அம்பாசங்கர் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

தற்போதையை நிலையில்,  கள்ளர், மறவர்களில் பெருமளவினர் பிற்படுத்தப்பட்டோர் BC பிரிவில் உள்ளனர். சில பிரிவினர் மட்டும், சில மாவட்டங்களில் சீர்மரபினர் (DNC) எனும் பெயரில் MBC பிரிவுக்குள் உள்ளனர். இதனால் BC பிரிவில் உள்ளவர்களும் MBC பிரிவின் இடங்களை எடுத்துக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் MBC பிரிவின் கீழ் இடஒதுக்கீட்டை பெற்றவர்கள் எந்த சாதியினர் என்கிற வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் - அது ஒரு மாபெரும் மோசடியை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

அதாவது, MBC பட்டியலில் கிடைத்த 20% இடஒதுக்கீட்டில்  இதுவரை எந்த சாதிக்கு எத்தனை விழுக்காடு கிடைத்தது என்கிற புள்ளிவிவரத்தை வெளியிட்டால், வன்னியர்களுக்கு எதிராக போராடத் தூண்டுகிறவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்! 

-------------
"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழலாமா?"

முத்தரையர், மீனவர், வண்ணார், போயர்-ஒட்டர், தொட்டியநாயக்கர், வலையர், ஊராளிக் கவுண்டர், குறவர் போன்ற பல சாதிகளுக்கான போராளியாக தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்த காசிமாயன் IRS - தனது நீலிக்கண்ணீரை நிறுத்திவிட்டு, MBC பிரிவில் இதுவரை கிடைத்த சாதிவாரி பலன்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று போராட முன்வர வேண்டும்.

அதுவே MBC & DNC பிரிவில் உள்ள இதர சாதிகளுக்கும் நீதி கிடைக்க செய்வதற்கான ஒரே வழியாக இருக்கும்.

-------------
ஆதாரம்: மக்கள் நெஞ்சம் வகுப்புரிமை மலர் 2012 (கலசம்)

குறிப்பு: இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 1971 மக்கள் தொகை சட்டநாதன் குழுவின் அறிக்கையில் உள்ளதாகும். கள்ளர், மறவர் எண்ணிக்கை இதை விட குறைவு என்று 1984-ல் அம்பாசங்கர் குறிப்பிடுகிறார். அதனை நாம் இங்கு ஒப்பிடவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages