அக்னிப்புரட்சி இன்றைய (07.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.09.2021) முக்கிய செய்திகள்.

💥  சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥  கேரளாவில் நிபா வைரசிற்கு 12 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம்

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேரை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று இல்லை.

மேலும் ஐந்து பேரின் பரிசோதனை முடிவு வரவில்லை- சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்.

💥  அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும்.

சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.

கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.

பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும்.

ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் - முதலமைச்சர்.

போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து - முதல்வர் அறிவிப்பு

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதல்வர்

💥  திருக்கோவில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1749 பணியாளர்களுக்கு மாதம் ₹5,000 ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

💥  புத்தகப் பைகளில் தலைவர்கள் படங்கள் கூடாது - உயர்நீதிமன்றம்.

பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது.

இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னாள் முதல்வர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தகவல்

💥  தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சிலை அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு சிலை.

அஞ்சலையம்மாள் அவர்களுக்கு கடலூரில் திருவுருவச் சிலை.

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் சிலை.

ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியில் சிலை.

நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை.

பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் சிலை.

தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கம் அமைக்கப்படும்.

கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.

💥  சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ₹5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி. அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும் - சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு.

💥  பொது இடத்தில் பிள்ளையார் சிலை வைக்க தடை ஏன்? - முதலமைச்சர் விளக்கம்.

கேரளாவில் ஓணம், பக்ரீத்துக்கு அனுமதி அளித்ததால் கொரோனா அதிகரித்தது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இதையெல்லாம் மனதில் வைத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டது - விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய பாஜக உறுப்பினருக்கு முதலமைச்சர் விளக்கம்.

💥  விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ₹5000 வழங்க உத்தரவு.

மண்பாண்ட தொழில் செய்யும் 12,000 தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் தொழில் செய்ய முடியாததால் ₹5000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விநாயகர் சிலை செய்யும் 3,000 தொழிலாளிகளுக்கு கூடுதலாக ₹5,000 என மொத்தம் ₹10,000 வழங்க உத்தரவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் நிரந்தர வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சட்டப்பேரவையில் நெய்வேலி திமுக எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன்.

* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரிய அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மாஜிஸ்ரேட் நீதிமன்றம் அனைத்து அமசங்களையும் கருத்தில் கொண்டே கூடுதல் விசாரணைக்கு அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறி மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

💥  கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மயிலாடுதுறை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி துவக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.

* நாகை : வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் முக்கிய திருவிழாவான பெரிய தேர் பவனி தொடங்கியது

💥  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா உறுதி; 1,576 பேர் குணமடைந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

💥  SBI வங்கியில் கணக்கு  வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசிகளில் AnyDesk, Quick Support, Teamviewer மற்றும் Mingleview செயலிகளை  பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இதுவரை பயன்படுத்தி வந்தால் அதிலிருந்து விலகிக்கொள்ளுமாறும் வங்கி நிர்வாகம்  கேட்டுக்கொண்டுள்ளது

* 10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  நாளை காலை 11 மணிக்கு dge.tn.gov.in  இணைய தளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா புத்தகப்பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

💥 கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் மறு விசாரணைக்கு தடைகேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கோடநாடு வழக்கின் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்ப வில்லை என உச்சநீதிமன்ற நீதியரசர்கள் கருத்து.

வழக்கில் தேவையிருப்பின் மேல் விசாரணை நடத்துவதில் என்ன பிரச்னை என்றும் நீதிமன்றம் கேள்வி.

💥  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  முதியோர்களுக்கு மருத்துவம்  அளிப்பதற்காக Tocilizumab மருந்தை நெருக்கடி கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதி

தமிழ்நாடு முந்தைய ஆட்சியின் போது மின்மிகை மாநிலமாக இருந்தது. தற்போது அணிலும், பெருச்சாளியும் ஓடுகிற மாநிலமாக இருக்கிறது
முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி

💥  பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கான் தலைநகர் காபூலில் பெண்கள் உட்பட பலர் போராட்டம்

💥  மீண்டும் வீட்டுக்காவலில் மெகபூபா?!
தம்மை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

💥  சென்னை மாநகர காவல்துறை தவிர்த்து மாநிலம் முழுவதும் மற்ற மாநகர காவல்துறை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் நிலையில் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்து தமிழக அரசு ஆணை

💥  சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 60 வயதாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

💥 விழுப்புரம் அருகே 110 ஏக்கர் பஞ்சமி நிலத்தை பிடுங்கி தனது மனைவி பெயரில் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீது விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

💥  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது.

* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் அறிவிப்பு - கோவில் நிர்வாகம்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நாளை காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு.

💥  அறிவுத்திறன் அடிப்படையில் 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

தேசிய தேர்வு முகமை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீட் தேர்வெழுத டிசம்பர் 31, 2020-ன் படி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்பது விதி - தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்பிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சி தேவை"

அறிவுத்திறனை வைத்து முதிர்ச்சியை கணக்கிட முடியாது - தேசிய மருத்துவ ஆணையம்.

* தி.மு.க. முப்பெரும் விழா - 2021 - காணொளி வழியில்  நடைபெறும்
திமுக தலைமை கழகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages