அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥 புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக "தேன்" திரைப்படம் தேர்வு.

வரும் 24-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் திரைப்பட விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் 1லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை இயக்குனர் கணேஷ் விநாயகருக்கு முதல்வர் ரங்கசாமி அளிக்கவுள்ளார்.

கொரோனா சூழல் காரணமாக செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

💥 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வரும் 13ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

💥 NEET தேர்வுக்கு எதிராக  சட்டபேரவையில் 13 ம் தேதி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

💥 3 ஆண்டு கால LLB படிப்பில் சேர tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30 ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர 06.10.21 தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

💥 அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் புதிய வரலாற்றை உருவாக்கி சாம்பியன் பட்டம் வென்றார் 18 வயதே ஆன எம்மா ரடுசானு.

அமெரிக்கா ஓபன் டென்னிசை 53 ஆண்டுகளுக்கு பின் பெற்ற முதல் பிரிட்டிஷ் பெண் என்ற சாதனையும் படைத்தார்.

இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.

6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.

💥 நாடு முழுவதும் இன்று 3,862 மையங்களில் ‛நீட்’ தேர்வு:

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வு இன்று நடக்கிறது.

நாடு முழுதும் 16 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

முழுதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 70 ஆயிரம் மாணவியர் மற்றும், 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னை, கோவை, கடலுார், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் நகரங்களில் மொத்தம், 224 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

💥 தாம்பரம் மாநகராட்சி - அரசாணை வெளியீடு:

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 4 நகராட்சிகளை இணைத்து அரசாணை வெளியீடு.

இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9.60 லட்சமாக இருக்கும்.

சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளும் தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக இணைக்கப்பட்டுள்ளன.

💥 சென்னை அம்பத்தூரில் ₹2500 கோடி மதிப்பில்  அமையவுள்ள NTT உலக தரவு நடுவத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் முக ஸ்டாலின்

தமிழகத்தின் 18 நகரங்களில் NEET தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை NEET தேர்வு  நடைபெறுகிறது

💥  வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகை: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தடைந்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ₨7.67 கோடி செலவில் 1,482 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி ஆலையை தொடங்கிவைக்க உள்ளார்.

💥  மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்; நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது- நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும்  சிரமங்களை புரிந்துகொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ- மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் கூட மத்திய அரசின் மனதை மாற்றவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாணவச் செல்வங்கள் மனம்தளர வேண்டாம்; சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத் தரும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை சட்ட ரீதியான போராட்டம் தொடரும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மாணவர்கள்,  நீட்தேர்வுக்காகத் தற்கொலை செய்யும் போக்கை முற்றாகக் கைவிட வலியுறுத்துகிறேன்- தொல்.திருமாவளவன்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது எனும் முதலமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றி - விசிகே தலைவர் தொல்.திருமாவளவன்.

நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மெகா தடுப்பூசி முகாம் - 20 லட்சம் பேரை கடந்து தடுப்பூசி.

💥 NEET தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு  வழங்க வேண்டும் என்றும்,  இனியும் மாணவர்களை ஏமாற்றாமல் NEET தேர்வின் உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்

💥 குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு

💥 தமிழகத்தில் மேலும் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு.

இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; 1,512 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28,36,776 லட்சம் பேருக்கு தடுப்பூசி.

💥 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி 28 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி சாதனை.

தமிழகம்‌ முழுவதும்‌ நாளை (செப்-12) 43,051 இடங்களில்‌ தடுப்பூசி மையங்கள்‌ அமைத்து, ஒரே நாளில்‌ 20 லட்சம்‌ பேருக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு திட்டமிட்டது

தமிழகத்தில் மொத்தம் 40,000 முகாம்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காலை 7 மணி முதல்‌ இரவு 8.30 மணி வரை பொதுமக்கள்‌ தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்

💥 கொரோனா உறுதியான 30 நாட்களுக்குள் உயிரிழப்பு நிகழ்ந்தால் அது கொரோனா வெருவியால் கருதப்படும். - நடுவண் அரசு புதிய விதிமுறை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages