அக்னிப்புரட்சி இன்றைய (14.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* நீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.

நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

பிளஸ் 2 தேர்வில் கனிமொழி 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

10 ஆம் வகுப்பில் கனிமொழி 500-க்கு 462 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

* கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்.

பூங்காக்கள் திறக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் இன்று முதல் அனுமதி.

கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனையும் இன்று திறக்கப்படுகிறது.

* பொறியியல் - தரவரிசை பட்டியல் வெளியீடு:

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம்.

tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

* விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பில் இடம் -அமைச்சர் பொன்முடி.

தமிழகத்தில் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 440 கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,51,870.

1.39 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசை மதிப்பெண் வெளியீடு  - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

*அனைத்து வாகனங்களுக்கும் ‘பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து.

இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை.

அதே சமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ளது - உயர் நீதிமன்றம்.

* காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கான, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.

டாக்டர்.கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டி - திமுக.

* பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 5 கட்டமாக நடைபெறும் என  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

* வங்கிக்கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கு மற்றும் KYC உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை, அடையாளம் தெரியாத நபர்களிடமோ, நிறுவனங்களிடமோ தெரிவிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

* 1976 ஆம் ஆண்டு அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது செல்லாது என "அறம் செய்ய விரும்பு" என்ற அறக்கட்டளை தொடுத்த வழக்கில் 8 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசு மற்றும் நடுவண் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

* குடியுரிமை திருத்தச் சட்டம், நியூட்ரினோ, மீத்தேன், எட்டு வழிசாலை,வேளாண் சட்டங்களுக்கு  எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான 5,570 வழக்குகளை திரும்பப்  பெற்றதற்கான தமிழக அரசின் ஆணை  வெளியீடு

* நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ வரை அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு ரத்து.

வாகனங்களுக்கு 60 முதல் 100 கி.மீ-க்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சாலை மேம்பாடு, இன்ஜின்களின் செயல்பாட்டை உயர்த்த வேகம் அதிகரிப்பு என மத்திய அரசு விளக்கம் - நீதிமன்றம் ஏற்க மறுப்பு.

காஞ்சிபுரம் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் இழப்பீடு கோரிய வழக்கில் உத்தரவு.

* 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளோம்- அமைச்சர் அன்பில் மகேஷ்.

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.

* மூன்று வகை கிரிக்கெட்  போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை  வீரர் லசித் மலிங்கா அறிவிப்பு.

* NEET எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
- முதலமைச்சர் முக ஸ்டாலின்

* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணபிக்க தவறியவர்களுக்கு தாமத விண்ணப்பம் நாளை முதல் 22 ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகின்றது.

* கனிம வள கடத்தலை தடுக்க CCTV கேமரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன்  கலந்தாய்வு மேற்கொண்டு  தேவைப்படும் இடத்தில் CCTV பொறுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த  கட்டுப்பாட்டு மையம் ஆட்சியர்   அலுவலக வளாகத்தில் தான் இயங்க வேண்டும் என்கிற வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

* வதந்தி!
சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என வெளியான செய்திக்கு சேலம் ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

* லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட பெண் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் இருந்து 12 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்.

கடலூர்: பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் ரூ 8000 லஞ்சம் வாங்கியபோது கைது.

விவசாயியின் நிலத்தை பட்டா பெயர் மாற்றுதல் செய்வதற்காக ரூ 8000 லஞ்சம் வாங்கியபோது கடலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள செண்பகவல்லி வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 12 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,591 பேருக்கு கொரோனா உறுதி.
1,537 பேர் குணமடைந்த நிலையில் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்:

மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 க்கும் மேலான மனுக்கள் குவிகின்றன.

மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பார்த்து குக் கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுகின்றனர்.

பொதுமக்கள்  கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனக்கிறது.

அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும்-தலைமைச் செயலாளர் இறையன்பு.

* பாமக தனித்து போட்டி.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages