அக்னிப்புரட்சி இன்றைய (15.09.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
* ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது.
jeemain.nta.nic.in இணையதளத்தில் முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர்; அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
* பொறியியல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியில் தொடங்கியது.
7.5% தனி இட ஒதுக்கீட்டின் கீழ் வரக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்கள் 80 பேர் பங்கேற்க கூடிய வகையில் கலந்தாய்வுக்கு ஏற்பாடு.
* அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
* 2022 பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை பதிவு செய்ய இன்று கடைசி நாள்.
https://padmaawards.gov.in என்ற இணையளத்தில் பரிந்துரைக்கலாம்.
2022 குடியரசு தினத்தன்று விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
* ஆந்திர மாநிலம் தெனாலியில் உலோகக் கழிவுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு 14 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
10-15 ஊழியர்களால் 2 மாதங்களில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பெங்களூருவில் நிறுவப்பட உள்ளதாக தகவல்.
* பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணாசாலையிலுள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை.
* பாமகவுக்குத்தான் இழப்பு - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:
அதிமுகவை இராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து விமர்சித்தால் நாங்களும் பாமகவை விமர்சிக்க நேரிடும்.
எங்களது ஓட்டு வங்கியில் எந்த வித பாதிப்பும் இல்லை; ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப்போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
* கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலதான்.
தேவை என்றால் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை.
கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில்தான் எடுபடும். பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை- செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ.
* பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு
அண்ணா நானூறு - amazon.in/dp/B08HZHGWFY
மாபெரும் மானுடப் போராட்டக்காரர் அண்ணா! - amazon.in/dp/B08J276F4L
இரு நூல்களும் செப்டம்பர் 18 , பிற்பகல் 12:30 வரை (இந்திய நேரம்) அமேசான் கிண்டிலில் இலவசம்!
💥 தொடரும் NEET தற்கொலைகள்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் செளந்தர்யா என்ற மாணவி NEET தேர்வு தோல்வி அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை.
* 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து செப்.30ஆம் தேதி முடிவு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
* கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் எனவும் தவறினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறிவிக்கை வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
* பாமகவைத் தொடர்ந்து தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு.
தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் தொடர்கிறது.
* 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி.
* நாட்டிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள பெருநகரமாக கோயம்புத்தூர் திகழ்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
* நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
விடுமுறை காலங்களில் கட்டுப்பாடுகள்
அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* காட்பாடியில் மாணவி சௌந்தர்யா நீட் தேர்வு அச்சத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரென்பது பெரும் கவலையளிக்கிறது.
தமிழக அரசின் நீட்விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்-தொல்.திருமாவளவன் எம்.பி.
* மாணவச் செல்வங்களே மனம்தளராதீர்கள்:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.
கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்.
நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* செப்.19 ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி.
செப்.19 தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
* இடம் மாறுகிறதா தலைமைச் செயலகம்?
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவமனை திறப்பு குறித்த ஜெயலலிதா பெயர் கொண்ட கல்வெட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய சட்டமன்ற அலுவலக கட்டடம்’ என்ற கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.
* உள்ளாட்சி தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்
* திமுக முப்பெரும் விழா:
பெரியார் விருது - மிசா மதிவாணன்
அண்ணா விருது - எல்.மூக்கையா
கலைஞர் விருது - கும்மிடிப்பூண்டி வேணு
பேராசிரியர் விருது - முபாரக்
பாவேந்தர் விருது- வாசுகி ரமணன்
உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
* புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30 வரை நீட்டிப்பு.
அனைத்துக் கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி.
உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி.
அனைத்து விதமான மதுபான கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி.
கடற்கரைச் சாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658 பேருக்கு கொரோனா உறுதி.
1,542 பேர் குணமடைந்த நிலையில் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56ல் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு பாமக கோரிக்கை
* கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு - மாவட்ட ஆட்சியர் சமீரன்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை.
பால், காய்கறி, மளிகை கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிறன்று இயங்க தடை.
No comments:
Post a Comment