அக்னிப்புரட்சி இன்றைய (19.09.2021) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 20 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது; 15 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
* நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
* முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1, 2020-21 க்கான நேரடி நியமன பணிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியே (trb.tn.nic.in) விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
* இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம்:
இன்று ஒரே நாளில் 15.23 லட்சம் தடுப்பூசிகளும், இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகளும் அரசால் செலுத்தப்பட்டுள்ளன-மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,697 பேருக்கு கொரோனா உறுதி.
1,594 பேர் குணமடைந்த நிலையில் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு.
சண்டிகரில் நடந்த காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சரண்ஜித் சிங் ஒருமனதாக தேர்வு. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அறிவிப்பு.
* IPL2021 க்கு பிறகு RCB அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக வீரர் விராத் கோலி அறிவிப்பு
No comments:
Post a Comment