அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2021) முக்கிய செய்திகள்.

💥  சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥  கொரோனா 3வது அலை பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் வந்துள்ள கொரோனா 3 வது அலை உலக வல்லரசு நாடுகளையே நிலைகுலைய செய்து வருகிறது.

அமெரிககா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது.

டெல்டா, ஆல்பா போன்ற வைரஸ்களால் கடும் பாதிப்புகளை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன.

உலகிலேயே கொரோனாவின் தீவிரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 76,599 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் நேற்று அந்த எண்ணிக்கை 117,989 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது.

இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு துருக்கியில் அதிகமாக உள்ளது.

துருக்கிக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது.

💥  தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு.

இதுவரை 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

💥  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது அம்பலம்.

விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு.

ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பது கண்டுபிடிப்பு - தமிழக அரசு.

5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும்.

நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவு.

அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை.

💥 நவ.13, 14 தேதிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு-மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.

NEET - SS தேர்வுக்கு nbe.edu.in இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 30-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். விரிவான விவரங்களுக்கு exam.natboard.edu.in.

💥  பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்:

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (ISRO) முன்னாள் தலைவரும் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில்  பாடதிட்டங்களை உருவாக்க நடுவண் அரசு குழு அமைப்பு

கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்.

குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க குழு.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களையும் கேட்டு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

💥  ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

ஏற்றுமதி மேம்பாட்டு கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

💥  ஐ.நா. பொதுச்சபை மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

நாளை மறுநாள் குவாட் மாநாட்டிலும், வரும் 25-ம் தேதி ஐ.நா பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

💥  புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ்  அறிவிப்பு.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - செப்டம்பர் 30

தேர்தல் தேதி -
முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 21.

இரண்டாம் கட்ட தேர்தல் - அக்டோபர் 25.

மூன்றாம்கட்ட தேர்தல் - அக்டோபர் 28

வாக்கு எண்ணிக்கை நாள் - அக்டோபர் 31

💥  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:

தமிழ்நாடு அரசின் நிதித்துறை துணைச் செயலாளராக பிரதிக் தயாள் நியமனம்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு கூடுதல் பொறுப்பு.

ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மதுபாலன் நியமனம்;

சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமனம்

💥  தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று.

ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் நடராஜன்.

ஹைதராபாத் - டெல்லி இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் - ஐபிஎல் நிர்வாகம்.

💥 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நாளை டெல்லி செல்கிறார்.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி பயணம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.

💥  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிப்பு.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் - கோவில் நிர்வாகம்.

இல்லையேல் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும் - கோவில் நிர்வாகம்.

💥  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி - கோவில் நிர்வாகம்.

அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வந்த நிலையில், கூடுதலாக 2 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி.

💥  தமிழக ஆளுநராக உள்ள RN ரவி, நாகா அமைதி பேச்சில் மத்தியஸ்தர் பதவியில் இருந்து  விலகியதை நடுவண் அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல்

💥  இன்று பிற்பகல் தமிழ்நாடு பல்லுயிர் ஆணையம் பற்றி விவாதம் நடைபெற்றது.

ஆஞ்சியோஸ்பெர்ம் பன்முகத்தன்மையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இதில் 5,640 வகையான தாவரங்கள், 533 உள்ளூர் இனங்கள், 230 சிவப்பினங்கள், 1,559 மருத்துவ தாவரங்கள் போன்றவை அடங்கும்.

* இருமொழி இணையதளங்கள்
உலகம் முழுவதும் Made in tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். இதுவே தமிழக அரசின் இலக்கு : முதலமைச்சர் முக ஸ்டாலின்

💥  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹50,000 வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு தகவல்

💥 Zee Entertainment Enterprises நிறுவனம் Sony India குழுமத்துடன் இணைகிறது என அறிவிப்பு

💥  தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 1,682 பேருக்கு கொரோனா உறுதி.

1,627 பேர் குணமடைந்த நிலையில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages