அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.69 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* 3-வது மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது:

தமிழகம் முழுவதும் 20,000 முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.

திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

28 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இன்று 3-ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் நாளை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது.

* மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் GST வரி சீரமைப்பு தொடர்பாக குழு (அமைச்சர்கள் குழு) அமைக்கப்பட்டுள்ளது

அதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர்

* உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட அகழாய்வு  தளங்களை இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி

* தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளர் சுப்ரியா சாகு IAS அவர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பு கூடுதலாக  வழங்கப்பட்டுள்ளது

* உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே (Railway) போக்குவரத்துத்துறை

இந்த ஆணையை  உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம் என மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் நடுவண் அரசுக்கு எச்சரிக்கை.

* இந்தியாவில் கடந்த 20 மாதங்களுக்கும் மேல் பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

சிற்றூர்கள், மலைவாழ் இடங்களில் வசிக்கும் மாணவர்களால் இணைய வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை

: உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை அறிவியலாளர் சௌம்யா ஸ்வாமிநாதன்

*:தமிழகத்தில் 3325 ரவுடிகள் கைது:

ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் 'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது.

972 பேர் சிறையில் அடைப்பு: 1117 ஆயுதங்கள், 7 துப்பாக்கிகள் பறிமுதல்.

* கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ்நாடு அரசு.

5 சவரன் நகைக்கடன் மட்டுமல்லாமல், வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு.

கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்தரவு.

அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடன்களை ஆய்வு செய்து நவம்பர் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் தமிழக அரசு உத்தரவு.

* ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் போட்டி.

தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் 1,386 வேட்பாளர்கள் போட்டி.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,694 பேருக்கு கொரோனா உறுதி.

1,658 பேர் குணமடைந்த நிலையில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* உலக வில்வித்தை Championship போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெள்ளிப் பதக்கம் வென்றார்

* தடுப்பூசி முகாம்களில் பணியாற்றிய கொழுமைப் பணியாளர்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிப்பு

* கோவை மாநகராட்சி பொறியாளர் கூண்டோடு இடமாற்றம்!

தலைமை பொறியாளர், 3 செயற்பொறியாளர்கள், ஒரு நகரமைப்பு அலுவலர் என்று மொத்தம் 5 பேர் பணியிடமாற்றம்

* நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் இறுதி இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்!

1386 பேர் தேர்தல் களம் காண்கின்றனர். 119 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages