அக்னிப்புரட்சி இன்றைய (27.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.09.2021) முக்கிய செய்திகள்.

💥  சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96 க்கும், டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.93 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

💥  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய பாரத் பந்த்

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வேளாண்  சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் மாலை 4 வரை நடைபெறுகிறது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் கடந்த 10 மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று நாடு தழுவிய போராட்டம்.

* பி.இ, பி.டெக் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அக்டோபர் 17ம் தேதி வரை 4 சுற்றுகளாக கலந்தாய்வு.

* ‘தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்த நாளையொட்டி அரசு சார்பில் மரியாதை.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், கீதாஜீவன் உள்ளிட்டோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

* தமிழகத்தில் 4 மாதங்களுக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம்.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

💥  சுகாதார திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார்:

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு உடல்நலம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும்.

💥 முதலமைச்சர் இல்லத்தின் முன் ஒருவர் தீக்குளிப்பு

தீயை பாதியில் அனைத்த காவல்துறையினர் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்!

* ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்றிய உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

* அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் (Digital) இயக்கத்தை, முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி  இன்று தொடங்கி வைத்தார்.

* NEET மற்றும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும் என  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

* பெல்ஜியம் இளையோர் Badminton போட்டி - இரண்டு பிரிவுகளிலும்  இந்தியா வெற்றி!

ஆண் பிரிவில் நரேன் சங்கர் ஐயர் மற்றும் பெண் பிரிவில் தஸ்மின் மிர் ஆகியோர் பட்டம் வென்றனர்

💥  கிரீஸ் நாட்டின்,மிகப் பெரிய தீவான கிரீட்டில் நிலநடுக்கம்
ரிக்டரில் 5.8 ஆக பதிவு. கட்டிடங்கள் சேதம். ஒருவர் உயிரிழப்பு என தகவல்

💥  பெங்களூரு: வில்சன் கார்டனில் பழங்கால  மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட NammaMetro பணியாளர்கள் காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினர்.

* மாநிலங்களவை எம்.பி.க்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு - சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு.

* புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியின்றி தேர்வு.

* மாநிலங்களவை உறுப்பினராக மத்திய பிரதேசத்தில் இருந்து  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வு.

💥 உங்கள் ஆட்சி அதிகார ஆட்டத்தில் இளம் மருத்துவர்களை பந்தாட வேண்டாம்!

மருத்துவ மேல்நிலை படிப்புகளுக்கான NEET PG 2021 தேர்வுக்கான பாடத் திட்டம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதற்கு நடுவண் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

* விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் மனு.

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக எஸ்.ஏ. சந்திரசேகர் பதில்மனு தாக்கல்.

கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழுவில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்க தீர்மானம் நிறைவேற்றம்.

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

* செப்டம்பர் வரை வழங்க வேண்டிய காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும்.

டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு அறிவுறுத்தல்.

* சென்னை மாநராட்சி மழைநீர் வடிகால் துறை பொறியாளர்களை  இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆணை

தலைமை பொறியாளர் நந்தகுமார் மற்றும் 2 செயற்பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ்  30 நாட்களில் 1121 பண்ணைக்குட்டைகள் அமைத்து சாதனை படைத்துள்ள திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு கடிதம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages