அக்னிப்புரட்சி இன்றைய (29.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.15 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.17 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* சேலம் வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்ட முகாம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் விநியோகம்.

2530 பயனாளிகளுக்கு ரூ.24.73 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.

100% தடுப்பூசி இலக்கை அடைந்த ஊராட்சி தலைவர்களுக்கு சான்றிதழ்.

* ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள்- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

அறக்கட்டளை தொடங்குவதாகக் கூறி, அரசிடம் இருந்து ₹15.45 லட்சம் நிதி பெற்று முறைகேடு செய்த வழக்கில், தற்போது திமுகவில் இருக்கும் முன்னாள் அதிமுக  அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்கில் 5 வருடம் சிறை தண்டனை பெற்ற மாஜி அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி.
சுவாச பிரச்சினை காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சை.

* உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க மறுப்பு.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

 சுயேச்சை எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்கவும் ஆணை.

* Last,Best Hope of Earth என பிரதமர் நரேந்திர மோடி குறித்து புகழ்ந்து செய்தி ஏதும் நாங்கள் வெளியிடவில்லை!

Photoshop செய்யப்பட்டு பகிரப்பட்டு வந்த செய்தி குறித்து அமெரிக்கா நாளிதழ் New York Times விளக்கம்

* செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த NEET தேர்வை நீக்கம் செய்யக் கோரி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.

NEET தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே நடந்த NEET தேர்வை நீக்கம் செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டுதலில் கோரிக்கை

சிறுபான்மையினர் மாணவர்கள் இந்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி
பள்ளி படிப்பு : 15.11.21
பள்ளி மேற்படிப்பு : 31.11.21

* வக்பு வாரிய சொத்துக்களை வக்பு வாரியத்தின் ஊழியர்கள் வழங்கும் தடையில்லா சான்றை ஏற்றுக்கொண்டு பிறர் பெயருக்கு மாற்ற அனுமதிக்கக் கூடாது என பதிவுத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

* தில்லியில் இந்திய - அமெரிக்க சுகாதாரத்துறை இடையிலான இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது

இந்த மாநாட்டில், இந்தியா - அமெரிக்கா இடையே உயிரியல் துறை மற்றும் பன்னாட்டு ஆய்வுகளுக்கான மையம் ஏற்படுத்துவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

* ஜப்பானின் நாட்டின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா தேர்வு

* 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு இயற்கை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

* பட்டாசு ஆலைகள் - நீதிமன்றம் கேள்வி:

சிவகாசியில் 4க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்திய பட்டாசு ஆலைகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? - உச்சநீதிமன்றம்

பட்டாசு உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக ஏன் சிபிஐ வழக்குப்பதிவு செய்யக் கூடாது? - நீதிபதிகள்.

* சிங்கார சென்னை 2.0 - விரிவான வழிக்காட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

* ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு.

சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில்,   திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது- வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேருக்கு கொரோனா உறுதி.
1,639 பேர் குணமடைந்த நிலையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி மரணம்.

* இந்தியாவிலேயே முதன்முறையாக ஈரடுக்கு மேம்பாலம் தமிழகத்தில் அமையவுள்ளதாக தமிழக அரசு தகவல்

2020ல் நடுவண்  அமைச்சர் நிதின் கட்காரி இதே அறிவிப்பை கொடுத்த போது போகாத ஊருக்கு வழி தேடுவதாக உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின்   கருத்து தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages