உள்ளாட்சித் தேர்தல்: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 30-ஆம் தேதி முதல் பரப்புரை!
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வரும் 30-ஆம் தேதி முதல் மொத்தம் மூன்று நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்கள்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பரப்புரை விவரம் வருமாறு:
30.09.2021 வியாழக்கிழமை - விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்
01.10.2021 வெள்ளிக்கிழமை - செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்
02.10.2021 சனிக்கிழமை - இராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம்,
No comments:
Post a Comment