யானை அனுப்பினால், யானை வால் தான் செல்கிறது'' உள்ளாட்சித் தேர்தலை குறித்து - மருத்துவர் இராமதாசு அய்யா விமர்சனம் - Agnipuratchi

யானை அனுப்பினால், யானை வால் தான் செல்கிறது'' உள்ளாட்சித் தேர்தலை குறித்து - மருத்துவர் இராமதாசு அய்யா விமர்சனம்

Share This

''யானை அனுப்பினால்,
யானை வால் தான் செல்கிறது'' உள்ளாட்சித் தேர்தலை குறித்து - மருத்துவர் இராமதாசு அய்யா விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரத்துக்கு பிறகும் நீடித்தன. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1958-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் இருந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. மாநில அரசுகள் விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என்ற அளவில் தான் சட்டம் இருந்தது.

அப்படி இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமும் நிதியும் கிடைக்காது; அதனால் கிராமங்களும்  முன்னேற முடியாது.... நாடும் முன்னேற முடியாது என்பதை உணர்ந்ததால் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை (63-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்) 1989-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டு வந்தார். ஆனால், அந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால்  நடைமுறைக்கு வரவில்லை.

1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி 73-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் சட்டமும், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி 74-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் நகர்பாலிகா சட்டமும் நடைமுறைக்கு வந்தன. இந்த சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு தான் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

மத்திய அரசு கிராமப் பஞ்சாயத்திற்கு வழங்கக் கூடிய நூறில் பதினேழு விழுக்காடு மட்டுமே கிராமத்திற்குப் போய்ச் சேர்கிறது என்றும் ஆறில் ஒரு பங்கு அரசின் நிர்வாகச் செலவிற்கே போகிறது என்றும் செலவிடும் மொத்தப் பணத்தில் 83 சதவீதம் வீணாகப்போவதாகவும்  ஆய்வில் தெரியவந்தது. இதை ஆர் ஆய்வுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய அப்போதைய ராஜிவ் காந்தி,‘‘தில்லியில் இருந்து யானை அனுப்பினால் அதன் வால்தான் ஒரு கிராமத்தைச் சென்றடையும்’’என்று கூறினார். இந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் உள்ளாட்சிகளின் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனாலும் காந்தியடிகள் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் ஏற்படவில்லை.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சிகளுக்குப் போதுமான நிதி அதிகாரமோ தேவையான நிர்வாக அதிகாரமோ இதுவரை தரப்படவில்லை. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 11&ஆவது அட்டவணையில் விளக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 29 துறைகளில் உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

   1. விவசாயம்,  2. நிலச்சீர்திருத்தம், 3. சிறிய அளவிலான பாசனத் திட்டங்கள், 4. கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, 5. மீன் வளம், 6. பண்ணைக்காடுகள், 7. சிறிய வனப் பொருட்கள், 8. சிறுதொழில்கள், 9. காதி கிராமத் தொழில், 10. வீட்டு வசதி, 11. குடிநீர் வசதி, 12. சாலைகள், பாலங்கள் அமைத்தல், 13. மின் வினியோகம், 14. மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள், 15. வறுமை ஒழிப்புத் திட்டங்கள், 16. எரிபொருட்கள், 17. கல்வி, 18. தொழிற்பயிற்சி, 19. வயது வந்தோர் கல்வி, 20 குடும்ப நலம் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.

இந்தத் துறைகள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. அதனபடி, உள்ளாட்சி அளவில் இந்தத் துறைகள் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும். அப்போது தான் கிராம சுயராஜ்யம் ஏற்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages