நீட் தேர்வினால் மாணவர் தனுஷ் சோகம் மறையும் முன்பே அரியலூர் மாவட்டம் துவாளங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

நீட் தேர்வினால் மாணவர் தனுஷ் சோகம் மறையும் முன்பே அரியலூர் மாவட்டம் துவாளங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

நீட் தேர்வினால் மாணவர் தனுஷ் சோகம் மறையும் முன்பே அரியலூர் மாவட்டம் துவாளங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி.கே.மணி
              
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், நீட் தேர்வினால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்ச உணர்வினால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது நமக்கு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.நீட் தேர்வு அச்சத்தில் இதுவரை 14 மாணவ மாணவிகள் இறந்துள்ள நிலையில். மேட்டூர் அடுத்துள்ள கூளையூர் தனுஷ் இறந்த சோகம் மறைவதற்கு முன்பே
     
இன்று அரியலூர் மாவட்டம் துவாளங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்கிற மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது மேலும் மேலும் நமக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மாணவி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். கனிமொழியின் பிரிவால் வாடுகின்ற குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
   
நீட் தேர்வு அச்சத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும். கல்வி பயின்று வாழ்க்கையில் உயரலாம் என்ற தன்னம்பிக்கையோடு கல்விப் பயணத்தை  தொடர வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாக அமையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
      
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.தமிழக அரசுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages