அக்னிப்புரட்சி இன்றைய (28.09.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.09.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.09.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ 94.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகம் முழுவதும் 119 உணவு பாதுகாப்பு அலுவலர்களை தேர்வு செய்வதற்கான போட்டி தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

* அக்.1ம் தேதி முதல் குளிர்சாதன பேருந்து சேவை:

அக். 1 முதல் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்.

கடந்த மே 10 ம் தேதி நிறுத்தப்பட்ட சேவை சுமார் 5 மாத காலத்துக்குப் பின் மீண்டும் துவக்கம்.

தொற்று எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பேருந்துகளின் எண்ணிக்கையை 1,300 வரை உயர்த்த திட்டம்.

* அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்-இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயதுக்குள் உள்ள குரல் வளம், உடல் வளம் உடையவர்கள், சமய தீட்சை பெற்றவர்கள், சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் அக்.27ம் தேதிக்குள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் செயல் அலுவலருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

* சீனாவில் தயாரிக்கப்படும் செல்பேசிகளை பயன்படுத்த வேண்டாம் என தன் நாட்டு மக்களுக்கு லுதுவேனியா அரசு கோரிக்கை.

கண்காணிக்கப்படவும், பயன்படுத்தும் வார்த்தைகள் தணிக்கை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை. எனினும் சியோமி நிறுவனம் இதனை மறுத்துள்ளது.

* காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவர் நியமனம்.

தற்போது மத்திய நீர் வள ஆணைதரதின் தலைவராக இருக்கும் எல்.கே.ஹல்தர் காவிரி ஆணையத்தின் முழு நேர தலைவராக நியமனம்.

எஸ்.கே.ஹல்தர் தற்போது காவிரி ஆணையத்தின் தாற்காலிக தலைவராக இருந்து வருகிறார், அவரின் பதவி காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

தற்போது எஸ்.கே.ஹல்தர் காவிரி ஆணையத்தின் முழு நேர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் தொடருவார்.

* தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் 13 மாவட்டங்களில் தொய்வு; விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கடிதம்.

தேனி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச்சிறப்பு.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி கடலூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், வேலூர் மாவட்ட செயல்பாடுகளும் திருப்தியாக இல்லை.

பின் தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் - தலைமைச் செயலாளர்.

* பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை - நீதிமன்றம் உத்தரவு:

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை நடத்த பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளப்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.

* அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும்  பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்.

பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்பட்டதற்கு சிண்டிகேட் ஒப்புதல்.

* தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

இது தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து நிவாரணம் தேடியிருக்கலாம்.

மனுத்தாக்கல் செய்தது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, துரைசுவாமி அமர்வு.

* உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் மத நிகழ்வுகள், அரசியல், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் பட்டாசுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை எதற்காக தயாரிக்கிறீர்கள் ?
- நீதிபதிகள் கேள்வி.

உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதை விளக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் சரமாரி கேள்வி.

* பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகினார்

* ஒரே ஒப்பந்ததாரர்  பணிகளை மொத்தமாக ஒப்பந்தம் எடுக்கும் "Packaged Tender System" முறை நீக்கம் : அரசாணை வெளியீடு

* 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் கையொப்பம் இருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும் என தேர்வுத்துறை அறிவிப்பு

* கடந்த அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடுவண் அரசு ஒப்புதல்

விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டி மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மாணவர்களுடனும் நாமக்கல், திருப்பூர், ராம்நாடு, திருவள்ளூர் ஆகிய 4 கல்லூரிகளில் தலா 100 மாணவர்களுடனும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

* குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் சி.பி.ஐ பிரமுகரும் டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவருமான கண்ணையா குமார் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

* பஞ்சாப் பெண் அமைச்சர் ரஸியா சுல்தான் திடீர் ராஜினாமா:

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவு.

பஞ்சாப் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் சித்து - ரஸியா சுல்தான்.

* மேலும் ஒரு நிர்வாகி பதவி விலகல்!
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதவி விலகியதை தொடர்ந்து பொதுச் செயலாளர் யோகிந்தர் திங்கிராவும் பதவி விலகினார்.

* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அக்டோபர் 6 & 9 ல் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிப்பு

* செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

2010 முதல் 2019ம் ஆண்டு வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்து தமிழக அரசு

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேருக்கு கொரோனா உறுதி.
1,643 பேர் குணமடைந்த நிலையில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும் - தமிழ்நாடு அரசு.

தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரது கருத்துகளைக் கேட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும்.

சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில் மக்கள் காத்திருக்கும்போது போதுமான இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை முழுவதுமாக முடியாத நிலையில், பண்டிகை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் -தமிழக அரசு.

கூட்டம் கூடும் இடங்களுக்கு செலதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

உரிய கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தால் மட்டுமே 3-வது அலையை தவிர்க்க இயலும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages