உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருந்த அதிகாரங்களும், இருக்கும் அதிகாரங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யாவின் விளக்கம் - Agnipuratchi

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருந்த அதிகாரங்களும், இருக்கும் அதிகாரங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யாவின் விளக்கம்

Share This

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருந்த
அதிகாரங்களும், இருக்கும் அதிகாரங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யாவின் விளக்கம்

1967-ம் ஆண்டுக்கு முன்பு ஆரம்ப சுகாதாரம், ஆரம்பக் கல்வி, கால்நடை மேம்பாடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் இயங்கின. ஒரு பள்ளி ஆசிரியரை நியமிக்கக் கூடிய அதிகாரம் ஊராட்சி ஒன்றியக் குழுவிடம் இருந்தது. ஒன்றிய அளவில் ஒரு சிறிய முதல்வரைப் போல இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. 1967-க்குப் பிறகு அப்போதைய தி.மு.க. அரசு மாநில சுயாட்சி வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டு, போராடியும் பெற முடியவில்லை. மத்திய அரசிடமிருந்து அதிகாரத்தைப் பெற முடியாத தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. அதனால் தான் உள்ளாட்சி அமைப்புகள்  முன்னேற முடியவில்லை.

அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஊராட்சி மன்றத் தலைவருக்கென்று நிறைய அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்களின் முக்கியக் கடமைகளை பஞ்சாயத்துராஜ் சட்டம் வலியுறுத்தி இருக்கிறது. அக்கடமைகளில் முக்கியமானவை கிராம சாலைகள், விளக்குகளை அமைத்தல், கழிவுநீர் வசதி, அதற்குண்டான வகையில் சாக்கடை கட்டுதல், தெருக்களைச் சுத்தமாக வைத்தல், பொதுக் கழிப்பறைகளை ஏற்படுத்துதல், இடுகாடுகள் பராமரிப்பு, குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்துதல் போன்றவை.

மாநில அரசினுன் வருவாயில் இப்போது 10 சதவீதத்துக்கும் குறைவான அளவுதான் கிராமப் பஞ்சாயத்துக்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. அதில் சுமார் 13,000 பஞ்சாயத்துக்களுக்கும் 40 ஒன்றியங்களுக்கும் இந்த நிதி தரப்படுகிறது. இதில் ஒட்டுமொத்தமாக செல்லுகிறபோது மிகக் குறைவான அளவுதான் கிராம பஞ்சாயத்துக்கு சென்று சேருகிறது. இது போதுமானது அல்ல.

மாநில அரசினுடைய வருமானத்தில் 30 சதவீத நிதியாவது பஞ்சாயத்துக்கு ஒதுக்க வேண்டும்.  அந்த வகையிலேயே கிராமங்களுக்கு இந்த அதிகாரப் பகிர்வும் நிதிப்பகிர்வும்  அதிகமாக்கப்பட்டால்தான் கிராமங்கள் வளரும். அதன் மூலம் நாடும் வளரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக நிதி வழங்கத் தேவையான அளவு மாநில அளவிலேயும் மத்திய அளவிலேயும் நிறைய நிதி ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த நிதி ஆதாரங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு நேரடியாக சேவை செய்பவை. அந்த அமைப்புகளில் அரசியல்  இருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளை சீரழிக்கிறது. இப்போதைய நிலையில் கிராமப்புற மூன்றடுக்கு நிர்வாகத்தில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மட்டும் தான் அரசியல் கட்சிகள் வழியாக இல்லாமல் சுயேட்சை சின்னங்களில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி  ஆகிய ஊரக உள்ளாட்சிகளுக்கும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் கட்சி சின்னத்தின் அடிப்படையில் தான் தேர்தல்கள் நடத்தப் படுகின்றன. இதனால் தேவையற்ற பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த நிலையை மாற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சி சின்னத்தின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.

மொத்ததில் உள்ளாட்சி அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தங்களின் வாலாக கருதக் கூடாது. மாறாக அவற்றை ஊரக, நகர்ப்புற அமைப்புகளின் தலையாகக் கருதி உரிய மரியாதையும், அதிகாரமும் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages