அக்னிப்புரட்சி இன்றைய (03.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 95.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

💥 தமிழகம் முழுவதும் இன்று 4 வது மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது.

காலை 7 மணிக்கு துவங்கிய முகாம் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்படும்.

கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.

கடந்த 19 ஆம் தேதி இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமும், கடந்த 25 ஆம் தேதி மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமும் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும் நான்காவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

20 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது.
தற்போது , தமிழக அரசிடம் 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

💥 முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை கொன்ற T23 ஆட்கொல்லி புலி சுட்டுக் கொல்லப்படாது - முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்.

புலி இருக்கும் இடத்தை கண்டறிந்து உயிருடன் சுற்றி வளைக்கவே வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் - முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்.

💥 இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73,76,846 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டதையடுத்து மொத்தம்  90,51,75,348 (இன்று காலை 7 மணி வரை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

💥 பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது:

போதைப் பொருளை பயன்படுத்தியது தொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது.

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கைது.

💥 மத்திய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் பலி:

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் கூட்டத்திற்குள் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் வேகமாக மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழப்பு.

💥 கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே கடம்பூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திராணி - வைத்தியநாதன் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட வைத்தியநாதன் ஆதரவாளர்கள் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் வீராசாமி என்பவர் உயிரிழப்பு

💥 மேற்குவங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி.

முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 21 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டது முடிவில் 

முதலமைச்சர் மம்தா பானர்ஜி
பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி

💥 M.Ed படிக்க விரும்புவோர் கவனத்திற்கு:

தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-கல்லூரிக்கல்வி இயக்குனரகம்.

விண்ணப்பங்களை www.tngasaedu.in அல்லது www.tngasaedu.edu என்ற இணைய தளங்களில் பதிவு செய்யலாம்.

6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.- கல்லூரிக் கல்வி இயக்ககம்

💥 உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மகனின் கார் மோதியதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு - 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலி.

* உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்திருப்பது மனிதத்தன்மையற்ற படுகொலை - ராகுல் காந்தி கடும் கண்டனம்.

உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் மனிதத்தன்மையற்ற படுகொலை நிகழ்ந்திருப்பதை கண்ட பின்பும் ஒருவர் அமைதி காத்தால் அவர் செத்துப்போனதற்குச் சமம் என ராகுல் காந்தி காட்டம் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages