அக்னிப்புரட்சி இன்றைய (04.10.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.01 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.31 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
💥 உ.பி.,யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுசெயலருமான பிரியங்கா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
💥 வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
விபத்தை ஏற்படுத்திய அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
* சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவரை வெளியே வர விடாமல் போலீசார் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
💥 Lakhimpur Kheri கலவரத்தில் ABP news செய்தியாளர் இராமன் காஷ்யப் உயிரிழப்பு
* வனப் பாதுகாப்பு சட்டம், 1980 -ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து கருத்துகள், பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்க
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலைமாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forests and Climate Change) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது
💥 NEET தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தர தமிழக முதல்வர் கடிதம்
மே.வங்கம், ஒடிசா, ஆந்திரா, கேரளா, சட்டீஸ்கர், டெல்லி, கோவா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்
கடிதம்
💥 பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் பெறக் கூடாது!
அரசே கட்டணத்தை செலுத்தும் என்று அறிவித்த பின்னரும், மாணவர்களிடம் இருந்து கட்டணம் கேட்கும் கல்லூரிகளுக்கு DoTE சுற்றறிக்கை
💥 புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது - புதுச்சேரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குளறுபடிகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் - உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் பெறுவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் வழங்கப்பட்டதாக வழக்கு - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தரமற்ற வீல் சேர்கள் பயன்படுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்படுவர் - தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.
💥 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்களை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாஜக ஆர்பாட்டம் - மாநில தலைவர் அண்ணாமலை.
💥 உ.பி.,யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுசெயலருமான பிரியங்கா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
* தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்.
10-ம் வகுப்பு மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய பள்ளிகளிலேயே ஏற்பாடு.
💥 3 வேளாண் சட்டங்களும் தற்பொழுது இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 வேளாண் சட்டங்களின் செல்லுபடி ஆவது உச்சநீதிமன்றத்தின் முடிவில்தான் உள்ளது. அப்படி இருக்க உழவர்கள் எதற்காக சாலைகளில் அமர்ந்து போராடுகிறீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
* தமிழகத்தில் திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு.
கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து அடிக்கடி சோதனை செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது - தமிழக அரசு.
💥 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.
டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியர் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
💥 உத்திரப்பிரதேச அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.
* ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு.
இமான் இசையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியீடு.
* பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை
* ஊரக உள்ளாட்சி தேர்தல் - முதல் கட்டமாக வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை நிறைவு
உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டி
💥 2056 Probationary Officer பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது SBI
நாளை தொடங்கி 25.10.2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
💥 தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம்.
முடங்கியது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். டெலிகிராம் ஆப்பில் தகவலை பரிமாறி கொண்டிருக்கும் இணையவாசிகள்.
பல பயனர்கள் வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிகிறோம்; விரைவில் மீண்டும் பழைய நிலையை கொண்டுவர பணிகள் நடந்துவருகின்றன. உங்கள் பொறுமைக்கு நன்றி - வாட்ஸ் அப் நிறுவனம் ட்வீட்
No comments:
Post a Comment