அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2021) முக்கிய செய்திகள்.

💥 வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சேவை மீண்டும் சீரானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதால் சமூகவலைதள பயனாளர்கள் அவதி.

8 மணி நேர முடக்கத்துக்கு பின், சமூக
வலைதளங்கள் இயங்க தொடங்கின.

💥 சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 100.23 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 95.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

💥 எச்சரிக்கை!  பணம், பரிசு, வவுச்சர், வெகுமதிப்புள்ளிகளை அளிப்பதாக வரும் அறியாதவர்களின் SMS, அழைப்பு அல்லது ஈமெயில் ஒருபோதும் பதிலளிக்காதீர்-RBL பேங்க்

* பிரதமர் அவர்களே...உங்கள் அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக எந்த உத்தரவோ, வழக்குப் பதிவோ இல்லாமல் தடுத்துவைத்துள்ளது”

-உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி ட்வீட்.

💥 பேனர்களை முழுமையாக தடுக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.

பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும்; தமிழ்நாடு அரசும், திமுகவும் பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

💥 விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி வழக்கு.

💥 ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதன் விளைவாக அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆறு மணி நேரத்துக்கு ஃபேஸ்புக் செயலி செயல்படாத காரணத்துக்காக அந்நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் தொடர்ந்து 7 மணி நேரத்திற்க்கும் அதிகமாக உலக அளவில் ஃபேஸ்புக் சேவை தடைப்பட்டதன் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு 5% சரிந்தது.

இதன் காரணமாக மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு ரூ.52 ஆயிரம் கோடியாகச் சரிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஸக்கர்பர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்

💥 வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ம் தேதி தனிப்பெருங்கருணை நாள்.

வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் தேதி 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

💥 இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.

தென்மேற்கு வங்க கடல, அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு.

இன்று அரியலூர் , பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்கள், டெல்டா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.

* தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'  தனிப்பிரிவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மக்களிடம் புகார்களை தானே பெற்று தனிப்பிரிவு அலுவலர்களிடம் வழங்கினார்.

💥 தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் வார விடுமுறை இன்றி தொடர்ந்து செயல்படும்.

நாள் ஓன்றுக்கு 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய உத்தரவு -  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்.

💥 புலியை கொல்ல வேண்டாம் - உயர்நீதிமன்றம்.

ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம், எனவே கொல்ல வேண்டாம் - தலைமை நீதிபதி.

நீலகிரியில் உலவும் டி 23 புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை - தமிழக வனத்துறை தகவல்.

புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - தமிழக வனத்துறை தகவல்.

புலியை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு நேரக் கூடாது - நீதிபதிகள்.

💥 உ.பி. சம்பவம் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:

உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை முழுமையாக  திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

கடந்த 300 நாட்களாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி வன்முறை.

வன்முறை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் - முதல்வர்.

💥 30 மணி நேர காவலுக்கு பின்னர் பிரியங்கா காந்தியை முறைப்படி கைது செய்தது உத்தரப் பிரதேச காவல்துறை

💥 நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

* அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில்  பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்களில் இருந்து நீக்கபட்ட தமிழ் மொழியை, உடனடியாக மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும் என கோரி அஞ்சலக மேலாளருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம்

💥 ISSF இளநிலை உலக Championship மகளிர் 25 மீட்டர் Air Pistol போட்டியில் இந்தியாவின் நாம்யா கபூர் தங்கப் பதக்கம் வென்றார். மனு பேகர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்

* தேசிய சொத்து மீள் கட்டுமான குழுமம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தகவல்

2002- SARFAESI சட்டம் பிரிவு 3 இன் கீழ் இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளதாகவும் தகவல்.

💥 தமிழ்நாடு பொறியியல் படிப்பு: முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு.

பி.இ., பி.டெக், பொறியியல் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

கலந்தாய்வில் 14,788 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 10,148 பேர் பங்கேற்றதாகவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது.

💥 புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை 5 நாட்களில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.

அடுத்த ஐந்து நாட்களுக்குள் வார்டு ஒதுக்கீடு சரி செய்யப்பட்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட தலைமை நீதிபதி சன்ஜித் பானர்ஜி உத்தரவு.

💥 திருக்கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கு ₹5,000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, வேப்பேரியில் கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

💥 இயற்பியலுக்கான 2021 நோபல் பரிசு அறிவிப்பு

அறிவியலாளர்கள் சுகுரோ மனபே மற்றும் கிளாஸ் ஹசல்மென் ஆகியோருக்கு பரிசின்  ஒரு பகுதியும் கியர்ஜியோ பாரிசி க்கு மற்றொரு பகுதி பரிசும் வழங்கப்பட உள்ளதாக Royal Swedish Academy of Science அமைப்பு அறிவிப்பு

💥 பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக நாளையும், 9-ம் தேதியும் விடுமுறை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பல்கலைக்கழகம், வளாகக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள் என்று அனைத்துக்கும் விடுமுறை

💥 Arton Capital வெளியிட்ட உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் ஐக்கிய அரபு எமிரேட்டின் பாஸ்போர்ட், மீண்டும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற தகுதியை தக்க வைத்தது

2018,2019 ஆண்டுகளிலும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற தகுதியை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

💥 கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்காது என அறிவிப்பு

💥 மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு விவகாரம்:

27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு.

பொது நல வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மனுவில் திமுக கோரிக்கை.

💥 லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக நடுவண் அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது  முதல் தகவல் அறிக்கையை உத்தரப் பிரதேச காவல்துறை பதிவு செய்துள்ளது

எந்தெந்த பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது?

147,148,149 - கலவரம் மூண்டது தொடர்பாக

279, 338- ஆபத்தான முறையில் வண்டி ஓட்டியது

304A - அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்துதல் 

302 - கொலை, 120B - சதித் திட்டமிடுதல்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages