அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 100.49 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 95.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

💥 வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரிப்பு.
சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 915.50  ஆக விற்பனை.

💥 உலக புகழ் பெற்ற....!

➤குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று கரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

➤அக்.15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

➤கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை.

➤வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை.

➤வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

➤அக்.7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.

➤திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

💥 தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 5 நீதித்துறை உறுப்பினர் இடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அறிவித்துள்ளது.

* லக்கிம்பபூர் கேரியை பார்வையிட ராகுல் காந்திக்கு தடை விதித்தது யோகி ஆதித்யநாத் அரசு

ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் குழு இன்று கலவரம் நடந்த பகுதியை பார்வையிட அனுமதி வழங்குமாறு மாநில அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்க மறுத்துள்ளது.

* நவம்பர் 1-ல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தொடர்பாக வரும் 12-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வு

வகுப்பறைகள், இருக்கைகளின் விவரங்களை ஒப்படைக்க கல்வி அலுவலர்களுக்கு, ஆணையர் ஆணை

* பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு:
நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை - ராகுல் குற்றச்சாட்டு.

விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.

மத்திய அரசு, விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது.

லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளேன் - ராகுல் காந்தி.

* ஜவ்வரிசி கலப்படம் - நீதிமன்றம் உத்தரவு:

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

💥 சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்:

கடலூர்: சிதம்பரம் அருகே கொத்தட்டை என்ற இடத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் எஸ்.பி. சக்திகணேசன் தலைமையிலான குழு திடீர் ஆய்வு மேற்கொண்டரில் புகையிலை பொருட்கள் சிக்கியுள்ளது.

* தடையை மீறி உயிரிழந்த உழவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக ராகுல் காந்தி பேட்டியளித்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல உத்திரப் பிரதேச அரசு  அனுமதி அளித்துள்ளது

* லக்கிம்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதலமைச்சரிடம் தொலைபேசியில் விவரங்கள் கேட்டறிந்தார் என தகவல் வெளியாகியுள்ளது

லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா.

லக்கிம்பூருக்கு சொந்த வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால் விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா.

💥 2021-வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மெக்மிலன் ஆகிய 2 அறிவியலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக Royal Swedish Academy of Science அமைப்பு அறிவிப்பு 

வேதியியலில் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கான ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 இரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

💥 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர் இறுதிக்குள் நிரப்ப வேண்டும்- புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்.

💥 சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய பாடத்திட்டம்  2022-23 கல்வி ஆண்டு முதலே அமலாகும் - மத்திய அரசின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

தேர்வு அறிவிப்புக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

* திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் முதல் நாள்.

💥 பொதுத் துறை வங்கிகளில் எழுத்தர் பணியிடங்களுக்கான  ஆட்சேர்க்கை அறிவிக்கையை  வெளியிட்டது IBPS!

முதன்முறையாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 843 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!  விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2021

💥 லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை தானாக முன் வந்து விசாரிக்க உள்ளது.

💥 இந்தியாவை விட்டு Ford நிறுவனம் வெளியேற உள்ள நிலையில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள கார் உற்பத்தி (Car Manufacturing) நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

* வரும் 16ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தொண்டர்களிடம் VK சசிகலா உரையாற்ற உள்ளதாக தகவல்

💥 இன்று நடந்து முடிந்த முதற்கட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 74.37% வாக்குப்பதிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages