அக்னிப்புரட்சி இன்றைய (07.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.10.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.26 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

💥 பாகிஸ்தானில் அதிகாலையில் 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

💥 19 மாதங்களுக்கு பின் இன்று முதல் மதுரை ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்.

மதுரை - ராமேஸ்வரம் இடையே இன்று முதல் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் இயக்க தொடங்கியது.

சிறப்பு ரயில் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு காலை 09.30 மணிக்கு மதுரை வந்தடைந்தது.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 06.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

💥 கோயில்களுக்கு அனுமதி - பாஜக ஆர்ப்பாட்டம்:

கோயில்களுக்கு செல்ல வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

* சென்னை, பாரிமுனையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்.

💥 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அர்ப்பணிப்பு:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பி.எம். கேர்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

💥 தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்.

பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள், கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பராமரிக்க  தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்க உத்தரவு.

அரசியல் கட்சிகள்,மதம்,சாதி,மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குற்றச்சாட்டு.

சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது - உயர்நீதிமன்றம்.

💥 ஜம்மு காஷ்மீரில் பள்ளியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனை அடுத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

* சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும்-கே.எஸ்.அழகிரி.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசும் சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ்காந்தி, சோனியாவை இழிவுபடுத்தியும் வன்முறையை தூண்டும் வகையிலும் சீமான் பேசுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

💥 இலக்கியத்திற்கான நோபல் பரிசு  தான்சானியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு.

காலனித்துவத்தின் பாதிப்புகள் மற்றும் வளைகுடா அகதிகளின் நிலை குறித்து எழுதியதற்காக நோபல் பரிசு அறிவிப்பு.

* ஆயுதபூஜையையொட்டி  சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு

💥 ஜம்மு காஷ்மீர்: ஶ்ரீநகரில் இன்று காலை சங்கம் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவரை  பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் பயங்கரவாதகளின் தாக்குதல்களால் உயிரிழப்பு

* பெங்களூருவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

💥 அக்டோபர் , நவம்வர் , டிசம்பர் மாதங்களில் எச்சரிக்கையாக , விழிப்புடனும் இருக்க வேண்டும்- லாவ் அகர்வால்.

கொரோனா 2 வது அலைய நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை- மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால்.

கொரோனா தொற்றின் சவால் இன்னும் முடிவடையவில்லை.

எனவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

பண்டிகை காலம் நெருங்குவதால் அக்டோபர், நவம்வர், டிசம்பர் மாதங்களில் எச்சரிக்கையாக , விழிப்புடனும் இருக்க வேண்டும்.

நெரிசலான இடங்கள், தேவையற்ற பயணங்களை தவிர்த்து, ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம்- லாவ் அகர்வால்.

* உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தது உத்தரப் பிரதேச காவல்துறை

💥 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவருக்கு 15.10.2021 முதல் விசா (visa) வழங்க உள்ளதாக  நடுவண் அரசு அறிவிப்பு.

அனைத்து வகை விமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் விசா வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு

💥 டோக்கியோவில் நிலநடுக்கம்!ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு (AFP)

💥 பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம்:

10% இடஒதுக்கீட்டில் வரம்பு நிர்ணயம் செய்தது எப்படி? - பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

💥 கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவு.

கோவில் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டின் பகுதியை 4 வாரங்களில் அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

177 ஏக்கரில் செயல்படும் அந்த நிறுவனம், 21 ஏக்கர் கோவில் நிலத்தை பயன்படுத்தியதற்காக 2 கோடியே 75 லட்சம் ரூபாய் குத்தகை தொகையை செலுத்த வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் பிறப்பித்திருந்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை நீதிபதி எம்.சுந்தர் தள்ளுபடி செய்தார்.

குத்தகை காலம் முடிந்த பிறகு நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததற்காக 9 கோடியே 50 லட்சம் ரூபாயை பூந்தமல்லி காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால ஸ்வாமி கோவில் நிர்வாகங்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

வருவாய் துறைக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

💥 முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவரை இடை நீக்கம் செய்ய வகை செய்யும் அரசின் சட்டப்பிரிவு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

சட்டப்பிரிவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு.
சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்.

💥 இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிப்பதாக பிரிட்டன் அரசு அறிவிப்பு

தற்போதைக்கு கோவிசீல்டு இரண்டு கட்ட தடுப்பூசியும் எடுத்துக் கொண்ட இந்தியர்களுக்கு மட்டும்  11.10.2021 காலை 4 மணி  முதல் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

💥 உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages