அக்னிப்புரட்சி இன்றைய (08.10.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 101.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 96.60 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* மிலாது நபி 19.10.2021 (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் - தமிழ்நாடு அரசு தலைமைக் காஜி அறிவிப்பு
* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம்:
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.
கோயில் வளாகத்துக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய மலையப்ப ஸ்வாமிக்கு ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடி அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி கொடுத்து வழிபட்டனர்.
கொரோனா 3 வது அலையை கருத்தில் கொண்டு 2 வது ஆண்டாக பிரமோற்சவ விழா பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் நடத்தப்படுகிறது.
* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை- உயர் கல்வித்துறை அரசாணை வெளியீடு.
சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி.
திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி.
ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி.
விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி.
4 கல்லூரிகளில் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி.
4 கல்லூரிகளிலும் BCA, B.Com., BBA., B.Sc., ( Computer Science ) என்று 4 பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி.
4 கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும்.
* தடையில்லா சான்று, கூட்டு நிலை வைப்புத்தொகை செலுத்துவது உள்ளிட்டவற்றில் இருந்து விலக்களித்து உயர் கல்வித்துறை உத்தரவு.
* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை:
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
ரெப்போ வட்டி விகிதம் 8 வது முறையாக மாற்றமின்றி 4% ஆக தொடர்கிறது.
2022 ஆம் நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 9.5% ஆகவே இருக்கும் என கணிப்பு.
2022 ஆம் நிதியாண்டின் பணவீக்க விகிதம் 5.3% ஆக இருக்கும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்.
* ஆரோவில் அறக்கட்டளையின் ஆட்சிமன்றத் தலைவராக தமிழக ஆளுநர் RN ரவியை நியமித்து நடுவண் அரசு அறிவிப்பு.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் உள்ளிட்ட 8 பேர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக நியமனம்.
* கொலை வழக்கை இப்படிதான் கையாள்வதா? - உச்ச நீதிமன்றம் கேள்வி.
உ.பி. லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாமல், தயவு செய்து வாருங்கள்; தயவு செய்து கூறுங்கள் என்று போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?
மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டிப்பு.
உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - உச்ச நீதிமன்றம்.
* இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு:
மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சிகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு.
* ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதற்கான ஏலத்தில் வென்றது டாடா நிறுவனம்.
ஏர் இந்தியாவின் மொத்த கடன் தொகையான ₹61,562 கோடியில் ₹46,260 கோடியை செலுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.
₹ 15,300 கோடி கடனுக்கான பொறுப்பை டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.
* கவிஞர் பிறைசூடன் (65) காலமானார்.
தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் பிறைசூடன்.
* புதுச்சேரியில் நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17 ல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்.
* மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியன் பதவி விலகல்.
3 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கே.சுப்பிரமணியன் ராஜினாமா.
* கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது
* ஆப்கானிஸ்தான் நாட்டின் குண்டூஸ் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழப்பு.150 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம்
* தமிழ்நாடு Dr. எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற குடிமைப் பணியில் அலுவலர் பூர்ணலிங்கம் தலைமையில் தேடல் குழுவை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு
* 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நாளை மறுநாள் KisanNyayRally என்ற பெயரில் பேரணி நடத்தவுள்ளார் பிரியங்கா காந்தி
No comments:
Post a Comment