அக்னிப்புரட்சி இன்றைய (09.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 101.27 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* பணியாளரை அடித்துக் கொன்றதாக கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்குப்பதிந்தது சிபிசிஐடி.

முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தங்கம் விலை உயர்வு:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,504க்கும் ஒரு கிராம் ரூ.4438க்கும் விற்பனை.

* பொறியியல் மாணவர் சேர்க்கை - அதிர்ச்சி தகவல்

பொறியியல் சேர்க்கை - 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்

131 பொறியியல் கல்லூரிகளில் 1 சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை

* மதிமுகவின் இளைஞரணி தலைவர் ஆகிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகன்  துரை வையாபுரி.

* 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

* அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

* தனது பயணத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை.

பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களோடு முதலமைச்சரின் கான்வாய் செல்ல ஏற்பாடு.

* உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது.  இந்த நிலையில், 2-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள்  வரும் 12 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27-சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages