அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 101.79 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 97.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* NEET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,352க்கும், ஒரு கிராம் ரூ.4410க்கும் விற்பனை.
* புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்:
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி காங்கிரஸ் கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டம்; கடைகள் அடைப்பு , தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
* நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகனை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார் அவர் வரும் 25ம் தேதி வரை சிறையில் அடைக்க - பத்மனாபபுரம் நீதிமன்றம் ஆணை
முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரும் யுடியூபருமான சாட்டை துரைமுருகன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
* திமுக ஆட்சி மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம்கொடுக்க வேண்டாம் எனக் கருதி நீதிமன்றத்தில் சரணடைகிறேன்.
என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என சட்டத்தின் முன்பு நிரூபித்து வெளியே வருவேன்- கடலூர் எம்.பி ரமேஷ்.
* கடலூர் எம்.பி.க்கு 2 நாள் நீதிமன்ற காவல்
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு 2 நாள் நீதிமன்ற காவல்
கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் நீதிபதி கற்பகவள்ளி உத்தரவு
* 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்
* அக்.25 முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்பு“
பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 25ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
* திமுக தொடர்ந்த வழக்கு; புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* NEET தேர்வு மற்றும் TASMAC கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
* பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகிய 3 பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு .
* ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளையன் சுட்டுக்கொலை:
ஏரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற நிலையில் காவல்துறையினர் என்கவுண்டர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த மேலும் 2 கொள்ளையர்கள் கைது.
துப்பாக்கியுடன் பதுங்கி இருந்தவர்களில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது போலீசார் இருவருக்கு காயம்.
* அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 17-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
* தமிழுக்கான இணைப்பில் இந்தி மொழி ஆவணம் வெளியானது குறித்து நடுவண் அமைச்சர் பூபேந்தர் யாதவிற்கு மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்த நிலையில்,
சுற்றுச்சூழல் தாக்க வரைவு -2020 தற்போது தமிழில் வெளியாகியுள்ளது.
* மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை:
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.
31,245 அலுவர்கள் 6,228 காவலர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவினை உடனுக்குடன் tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜைக்காக நவ- டிச -ஜன 2021-22ம் ஆண்டிற்கான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு துவங்கியது - தேவசம் போர்டு அறிவிப்பு.
No comments:
Post a Comment