அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 101.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ 97.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
💥 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியப் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021-ஆம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
💥 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதையாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் மருதையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
💥 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
74 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாடட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் முடிகளை tnsec.tn.nic.in என்ற இணையத்தில் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு.
💥 விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி.
அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
விஜயதசமி நாளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென ஹைகோர்ட்டில் மனு.
மனு மீதான விசாரணையை பிற்பகல் 1.30மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
💥 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு வல்லுனர் குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல்.
2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு, இந்திய மருத்தவ தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்.
💥 ஊரக உள்ளாட்சி தேர்தல்:
விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்தில் வாக்குச்சீட்டில் உள்ள எல்லா சின்னங்களிலும் வாக்களித்துள்ளார் ஒரு வாக்காளர்.
💥 ஒரே ஒரு வாக்கு பெற்று தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்த பாஜக வேட்பாளர்!
கோவை குருடம்பாளையம் ஊராட்சி, 9வது வார்டு இடைத்தேர்தலில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் கூட தனக்கு தான் மட்டுமே ஓட்டுப்போட்டு தோற்றுள்ள பாஜக வேட்பாளர் கார்த்திக்.
💥 உளுந்து மற்றும் பச்சைப்பயிறு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் - தமிழக அரசு.
நடப்பாண்டில் 4,000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைபயிறும் கொள்முதல் செய்யப்படும் - தமிழக அரசு.
உளுந்துக்கு கிலோ ரூ.63-ம், பச்சை பயிறுக்கு ரூ.72.75-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் - தமிழக அரசு.
* விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும்: சென்னை உயர்நீதிமன்றம்.
அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் நாளை (அக்.,13) ஆலோசனை நடத்த உள்ளதாக - தமிழக அரசு வாதம்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.
💥 காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ
5-ம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் விரும்பினால் 1 மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
💥 அக்டோபர் 18 முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயங்க வான்வழி போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது
💥 காரிப் பருவத்தில் சாகுபடி செய்த உளுந்து, பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் - தமிழக அரசு.
உளுந்து - 63 ரூபாய், பச்சைப்பயறு - 73.75 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் - தமிழக அரசு.
💥 அரசு நுட்பியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, கணினி வழி போட்டி தேர்விற்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
* மூத்த தலைவர்களுடன் இன்று மேதகு ஆளுநர் திரு.ரவி அவர்களை நேரில் சந்தித்தேன்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் arivalayam எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்! - அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்
* தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருபது இடங்களில் தேசிய புலானாய்வு முகமை(NIA) சோதனை
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் நடைபெற்ற சோதனையில் Sim cards, Pendrive, செல் பேசி, புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
* பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார்.
இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிறை ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.
50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும், 200 மேற்பட்ட படங்களிலிலும் நடித்துள்ளார்.
வில்லனாகவும் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார்.
* 110 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்.
மாநிலம் முழுவதும் 110 மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( DEO ) பணியிடமாற்றம்- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.
No comments:
Post a Comment