அக்னிப்புரட்சி இன்றைய (16.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 102.70 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 98.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  இன்று டெல்லியில் நடைபெற்றது

கட்சியின் புதிய தலைவர் மற்றும் உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது எனத் தகவல்.

ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட 57 உறுப்பினர்கள் பங்கேற்பு.

தமிழகம் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு.

* சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

பக்தா்கள் அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவாா்கள்.

இணையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்காக சந்நிதானத்தில் அனுமதிக்கப்படுவாா்கள்.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.

சந்நிதானம் நடை அக்டோபா் 21-இல் அடைக்கப்படும்.

சித்திரை ஆட்டவிசேஷத்தை முன்னிட்டு மீண்டும் நவம்பா் 2-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, அடுத்த நாள் நடையடைக்கப்படும்.

அதன் பிறகு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 15-ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாதனை சிறுவன் சர்வேஷ்க்கு முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை
9வயது சிறுவன் சர்வேஷ் தொடர் ஓட்டம்.

14 நாட்கள் 750 கிலோமீட்டர் தூரம் ஓடி வந்த சிறுவன் சர்வேஷ்.

* சுதாகரன் விடுதலை:
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

* ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதல்முறையாக ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா கண்ணீருடன் மரியாதை.

என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்.

இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கிவைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன்.

அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் -சசிகலா.

* அதிமுகவில் சசிகலாவிற்கு என்றுமே இடமில்லை. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆஸ்கர் வாங்கும் அளவிற்கு நடித்தாலும், மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள்.

யானை பலம் பொருந்திய அதிமுகவை கொசு தாங்கிப் கொண்டிருப்பதாகக் கூறுவதா?-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

* பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையின் செயல் கண்டிக்கத்த‌க்கது. பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages