அக்னிப்புரட்சி இன்றைய (17.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 103.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 98.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது:

முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

* சட்டப்படி பதிவு செய்த வணிக நிறுவனங்கள், கடைகள் மூலம் பாடப்புத்தகங்களை விற்க அனுமதி பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் textbookcorp.tn.gov.in என்ற  இணையதளத்தில் நவம்பர்  5க்குள் விண்ணப்பிக்கலாம்-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

* அதிமுக  பொன்விழா ஆண்டையொட்டி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்.

தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் மரியாதை.

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்த பின்னர் இனிப்பு வழங்கிய ஓபிஎஸ்- ஓபிஎஸ்.

* சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா.

அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா  மாலை அணிவித்து மரியாதை.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் வி.கே.சசிகலா பெயரில் கல்வெட்டு பதிக்கப்பட உள்ளது.

அந்த கல்வெட்டில், கொடியேற்றியவர்: வி.கே.சசிகலா, கழக பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* அதிமுக பொன்விழா : தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு.

எம்.ஜி.ஆர். பாடலை மேற்கோள்காட்டி சசிகலா பேச்சு

கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போலாமா?- என்ற பாடல் வரிகளை கூறி சசிகலா சூசக விமர்சனம்.

எம்.ஜி.ஆர். விதையாக, ஜெ. மழையாக இருந்ததால் அதிமுக விருட்சமாக வளர்ந்தது- சசிகலா

நீரடித்து நீர் விலகாது- நெருக்கடியான சூழலிலும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டு சென்றேன்: சசிகலா

* மெட்டி ஒலி 'விஜி' காலமானார்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ‘மெட்டி ஒலி’ புகழ் உமா மகேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 40.

'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களிலும், 'ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாளப் படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார் உமா.

* ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த தமிழக அரசின் "வரைவு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை" தற்போது தமிழில் வெளியிடப்பட்டுள்ளது

முழு கொள்கை கீழே இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
http://www.tnscb.org/wp-content/uploads/2021/10/Draft-RR-Policy-Tamil.pdf

* அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது:

ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார்.

என்ன புரட்சி செய்தார் சசிகலா?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது.

* அக்டோபர் 19 காலை 6 மணிமுதல் அக்டோபர் 21 இரவு 12 மணிவரை கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் யாரும் வருகை தரவேண்டாம் என திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு.

* மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - பிரதமர் மோடி ட்வீட்.

* தமிழக ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சலில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு.

போலி கணக்குகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

* குமரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை( திங்கள் கிழமை) விடுமுறை:
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages