அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 103.01 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ 98.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம்:

நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன - அண்ணா பல்கலைக்கழகம்.

* கன்னியாகுமரியில் அமைச்சர்கள் ஆய்வு:

கன்னியாகுமரி: செண்பகராமன்புதூர், செம்பாறை பகுதிகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு.

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாய பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு.

* தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி நாளை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்குகிறார்.

* பணிந்தது சொமோட்டோ நிறுவனம்:
தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமோட்டோவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால், சொமோட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற , தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார்.

அதற்கு இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமோட்டோ நிறுவனம் பதில் அளித்தது.

இதனை படமாக எடுத்து விகாஷ் சமூக வலைதளங்களில் பதிவிட, சொமோட்டோவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மொழி சர்ச்சையை ஏற படுத்திய அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக சொமோட்டோ நிறுவனம் விளக்கம்.

* முதல் முறையாக, கீழடி அகழ்வாய்வு தளத்தில்  "மீன் சின்னம்" பொறித்த உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது

* டாடா குழுமத்தில் பெண்களுக்கு பணி வாய்ப்பு. வாய்ப்புள்ளோர் பயன்படுத்திக் கொள்ளவும்...

* 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புதுச்சேரி மழலையர் பள்ளி ஆசிரியரின் விடுதலை ரத்து.

போலீஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக நீதிபதி வேதனை.

* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்.

* மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை.

சேலம்- அமைச்சர்  கே.என்.நேரு.

தேனி -அமைச்சர் பெரியசாமி.

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு.

தருமபுரி வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

காஞ்சிபுரம் - தா.மோ. அன்பரசன்,

நெல்லை - ராஜ கண்ணப்பன்,

திருவாரூர் - சக்கரபாணி,

கோவை - செந்தில் பாலாஜி நியமனம்

கிருஷ்ணகிரி - காந்தி,

பெரம்பலூர் - சிவசங்கர்,

தஞ்சை - அன்பில் மகேஷ்,

மயிலாடுதுறை, நாகை - மெய்யநாதன் நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages