அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 103.92 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 99.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆத்தூர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் ஆத்தூர் இளங்கோவன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

உதவியாளர் சரவணனின் சென்னை நந்தனம் வீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு இன்று தேர்தல்.

கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பதவிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

* பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உரை.

மக்களிடம் ஒத்துழைப்பு இருந்ததாலே இந்த சாதனை சாத்தியமானது.

100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனை நாட்டு மக்கள் 130 கோடி பேரையும் சேரும்- பிரதமர் மோடி.

கொரோனா குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை; விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம்   - பிரதமர்.

கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம்.

கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை அளிப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோம்.

இந்தியாவின் வேக்சின் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது.

அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு வேக்சினை கொண்டு சென்றோம்.

தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி.

* நடிகர் விவேக் மரணம் - தடுப்பூசி காரணமல்ல:

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல - தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே நடிகர் விவேக் உயிரிழந்தார் - ஆய்வுக்குழு.

* அரியர் தேர்வுகளை ரத்துசெய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை- உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என உத்தரவிட்டு வழக்குகள் முடித்துவைப்பு.

* 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை கோரிய வழக்கு; நவம்பர்  24ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* புதுக்கோட்டை மீனவர் ராஜ் கிரண் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 18ம் தேதி கோட்டைப்பட்டிணத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ராஜ்கிரண், இலங்கை கடற்படை கப்பல் தாக்கியதில் உயிரிழப்பு.

* எச்சரிக்கை ⚠️
ஆர்பிஎல் பேங்க்கிலிருந்து வரும் OTP எப்போதும் விற்பனையாளர் பெயர் & பரிவர்த்தனைத் தொகையைக் கொண்டிருக்கும்.

உங்கள் OTP அல்லது அட்டை விவரங்களை ஒருபோதும் யாருடனும் பகிரவேண்டாம்.

உங்களிடம் பகிரும்படி யாராவது கேட்டால், 📞 +91-22-6232-7777 என்ற எண்ணில் எங்களிடம் புகாரளிக்கவும்
காணொளியைப் பார்க்க:the ewewe youtu.be/ujWokAeFqcg - RBL Bank

* அஞ்சல் துறை மூலம் நம் படத்துடன் ஸ்டாம்ப் வெளியிட முடியும் என்கிறார்களே, அது குறித்தத் தகவல்களைத் தர முடியுமா? - கேள்விக்கான பதில் இங்கே!

#Stamp | #DoubtOfCommonMan | #DOCM

* லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக
அரசால் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை.

* தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் சோதனை.

ரூ.29.77 லட்சம் பணம், 21.2 கிலோ தங்கம், 282
கிலோ வெள்ளி பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை.

21.2 கிலோ தங்கம்
282 கிலோ வெள்ளி
10 சொகுசு கார்கள்
2 வால்வோ பேருந்துகள்
ரூ.29.77 லட்சம் ரொக்கம்- பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை.

* புதுவை மாநிலம் பாட்டாளி மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர்
அவர்களை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages