அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 104.52 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ 100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு படுகொலை - தலைமறைவான 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

* தாம்பரம், மயிலாடுதுறை, ஓசூர், திண்டிவனம், அருப்புக்கோட்டை, அறந்தாங்கி, குன்னூர், பழனி, திருப்பத்தூர், வேதாரணயம்,  உள்ளிட்ட19 வட்ட  மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு

* தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குங்கள்- கமல்.

திமுகவின் 505 வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதி இருக்கிறது- கமல்.

* வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி மூலம் ஆலோசனை.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை.

* புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7,000 லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்படும் - முதல்வர் ரங்கசாமி.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

* ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை-அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.

ஜெயலலிதா உயிரிழப்பு தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்
நிறைய அரசியல் தலைவர்களை விசாரிக்காமல் இருக்க எங்கள் மருத்துவர்களை மட்டும் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்தது ஒரு தலைபட்சமானது.

எனவே, ஆணையத்தின் முன்பாக மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுக சாமி ஆணையம்- அப்போலோ நிர்வாகம் வாதம்.

அரசு கூறியதால்தான் சிசிடிவி கேமராக்கள் மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டன-ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் குறித்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் பதில்.

*2021-22 ம் கல்வியாண்டில் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களையும் பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்- அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நாட்டா தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

* தமிழகத்தில் முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர்.

வடிகால்களை தூர்வார வேண்டும்; அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு:

கணவன் - மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை.
வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி.

2019ல் திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி மீது பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு நாடகம்.

ஏசி வெடித்து இறந்துவிட்டதாக நாடகமாடிய கோவர்த்தனன், மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

நவம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு.

* அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப் பொருளாக மாறி இருப்பது சரியல்ல - தலைமை செயலாளர் இறையன்பு.

திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான் - தலைமை செயலாளர்.

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்புவது வழக்கமான நடைமுறையே.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டல்.

அலுவல் ரீதியாக அனுப்பப்பட்ட கடிதத்தை அரசியல் சர்ச்சையாக்குவது சரியானது அல்ல - தலைமை செயலாளர் இறையன்பு.

* கடலூர் கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கு.

ஆயுள் தண்டனையை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல் டிஎஸ்பி செல்லமுத்து மேல் முறையீடு சிபிஐ 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிககை 4 ஆக உயர்வு.

10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages