அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 104.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 100.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட ஆதரவு நல்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் VD சதீசன் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம்

"கேரளாவுக்கு பாதுகாப்பு", "தமிழகத்துக்கு தண்ணீர்" என்ற நோக்கில் ஒன்றாக செயல்பட அழைப்பு

* தொடங்கியது பருவமழை மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை:

காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் சென்று தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

ஈரக்கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது, மின் சாதணங்களை பயன்படுத்தும் போது நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட்டு பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்ப்பதோடு, மின் கம்பங்களை பந்தல்களாகவோ, விளம்பர பலகைகளாகவோ பயன்படுத்தக்கூடாது.

கட்டிடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி உள்ளதா என்பதை தெரிந்துக்கொண்ட பின் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

விழாக்காலங்களில் மின் பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் தேர் மற்றும் பல்லக்கு இழுக்கும் போது முன்கூட்டியே மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவித்து முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு, பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரீல்களில் அலங்கார சீரியல் விளக்குகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் பெ.கிருஷ்ணா அரசு மேனிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு.

* சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை:

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம்.

* 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு:
வரும் 29,30 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.

வரும் 29,30,31 ஆகிய 3 நாட்கள் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

* சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு.

விழுப்புரம் நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.

* புதுச்சேரியில் நவ.8ல் பள்ளிகள் திறப்பு:

புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும்.

வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் நமச்சிவாயம்.

* தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் கேள்வி?

தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?

* ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தியில்லை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து.

கும்பகோணத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்.

* இல்லம் தேடி கல்வி திட்டத்தை  விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள்; இதுபோன்ற திட்டங்களே திராவிடம்.

இல்லம் தேடி கல்வி பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இது கட்சியின் ஆட்சி இல்லை, இனத்தின் ஆட்சி.

கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிட இயக்கம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

* தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ம்  தேதியிலிருந்து நவம்பர் 3ம் தேதி வரை கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நியாய விலை கடைகளுக்கு நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு.

* கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி. தமிழக எல்லையோரம் உள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு  விவகாரத்தில், இரு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages