அக்னிப்புரட்சி இன்றைய (30.10.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 105.74 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 101.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:
தொடர் மழை காரணமாக கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை.
* தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு.
* தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவு.
* தமிழகத்தில் இன்று 7ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.
இதுவரை 6 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நிறைவு.
44 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி முகாமை மக்கள் சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.
* தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உத்தரவு.
* மதுரை: தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
* மதுரை: கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
114-வது தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.
* தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.
* கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
*:ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் கிடையாது - தமிழக அரசு.
ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறை நீக்கம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு.
* ராமநாதபுரம்; பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
114-வது தேவர் ஜெயந்தியையொட்டி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
* தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய "ஜூலை 18" இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின்.
பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு அரசாணை விரைவில் வெளியீடு - முதல்வர் மு.க ஸ்டாலின்.
சூலை 18 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை : முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
* மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதி எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்பட்டு தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் ₹1 லட்சம் மதிப்பிலான பொற்கிழி வழங்கப்படும்
* தீபாவளி நாளன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை - சென்னை மாநகராட்சி உத்தரவு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி சென்னையில் அனைத்து இறைச்சி கடைகளும் இயங்கத் தடை
* வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு:
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.
* தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ 18.20 லட்சம் பறிமுதல்.
ரூ 6.47 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள், ரூ 36 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்.
* முல்லை பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.
முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது.
கடந்த 28-ம் தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் 2 மதகுகள் திறக்கப்பட்டது.
கேரள அரசு அதிகாரிகள் தான் அணை மதகுகளை திறந்தார்கள் என்றது தவறான தகவல் - அமைச்சர் துரைமுருகன்.
* அமமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடன் வரும் நவம்பர் 6ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என டிடிவி தினகரன் அறிவிப்பு.
அதிமுக உடன் இணைப்புக்கான முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ள சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
* தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி.
மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்திய நிலையில் தமிழக அரசு அனுமதி.
ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்.
பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை பரிசீலித்தும் தமிழக அரசு உத்தரவு.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி.
* 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்.
தமிழக தொழில்துறை முன்னேற்ற கழக (சிப்காட்) நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமனம்.
மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு மோனிகா ரானா ஐ.ஏ.எஸ் நியமனம்.
தமிழக நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு கழகத்திற்கு சிவகிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் நியமனம்.
வணிகவரித்துறை இணை ஆணையராக ஆனந்த் மோகன் ஐ.ஏ.எஸ் நியமனம்.
வணிகவரித்துறை (புலனாய்வு-1) இணை ஆணையராக மெர்ஜி ரம்யா ஐ.ஏ.எஸ் நியமனம்.
பள்ளி கல்விதுறையின் இல்லம் தேடி கல்வி துறை சிறப்பு ஆணையராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமனம்.
தமிழக இ-சேவை மையத்தின் இணை இயக்குநராக பாலசந்தர் ஐ.ஏ.எஸ் நியமனம்.
No comments:
Post a Comment