இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். - Agnipuratchi

இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Share This

இஸ்லாமியர்களின் இறைதூதர்  நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.

மதங்களைக் கடந்த நல்லிணக்கம், அமைதி, மகிழ்ச்சி, பசியில்லா உலகம் ஆகியவை தான் நபிகள் நாயகம் விரும்பியவை ஆகும். அதற்காகத் தான் அவர் பாடுபட்டார்.  தமது வாழ்நாளில் இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார்.  அவர் போதித்த பாடங்களைக் கடைபிடித்து, அவர் விரும்பியவாறு ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages