அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 106.35 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 102.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு.

தமிழகத்தில் 600 நாட்களுக்குப்பின், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படுவதை ஒட்டி மாணவ - மாணவிகளை வரவேற்க பள்ளிகள் தயாராகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

* விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு

* கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

* கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்

* 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்மழை எதிரொலி - கடலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

* தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவிப்பு.

tnau.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, nodalofficertnau2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நவ. 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

* திருவாரூர் மாவட்டத்தில் கனமழை கராணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு!

* மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்- 6 மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ம.பி., சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்கள் உருவான நாள்- பிரதமர் மோடி வாழ்த்து.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மாநில மொழிகளில் ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து.

* சுவர் இடிந்து விழுந்து புது மாப்பிள்ளை, பாட்டி உயிரிழப்பு:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று அதிகாலை இடி தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்து பாட்டி, பேரன் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த அஜித்குமாருக்கு இன்னும் 15 தினங்களில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268 உயர்ந்து ரூ.2,133-க்கு விற்பனை; வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

* புதுச்சேரி விடுதலை நாள்; புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

* அரசுத் துறைகளில் காலியாக உள்ள பத்தாயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

* மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறக்க நடவடிக்கை
சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.

* தமிழக அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள்  தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது.

அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன்பணம் வழங்க வேண்டும்- பாமக நிறுவனர் இராமதாசு அய்யா.

* எரிவாயு உருளை விலையேற்றம்!
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ₹266 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தேநீர் உள்ளிட்ட  உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு

* பள்ளி மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

சென்னை, மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து முதல்வர் வரவேற்பு.

* கோயம்பேட்டில் மேம்பாலம் திறப்பு:
சென்னை:  கோயம்பேட்டில் ரூ 93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோயம்பேடு புதிய பாலத்தால் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு.

* வன்னியர் இட ஒதுக்கீடு - அரசாணை ரத்து.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது எனவும் கருத்து.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு தீர்ப்பு.

* இடஒதுக்கீடு ரத்து - ஏமாற்றம் அளிக்கிறது - பாமக வழக்கறிஞர் பாலு.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - பாமக வழக்கறிஞர் பாலு.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் - வழக்கறிஞர் பாலு.

21 பேர் உயிர் தியாகத்தில் பெறப்பட்ட 20% இடஒதுக்கீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக பயனடைந்த சமூகங்கள் இந்த உள்ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்து வழக்கு நடத்தி இதனை ரத்து செய்ய வைத்திருப்பது பெரும் வேதனையளிக்கிறது.

உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

உள்ஒதுக்கீ்ட்டை அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டிருந்தது. ஆனாலும், மேலும் தீவிரமாக இந்த வழக்கை நடத்தியிருக்கலாம்- வழக்கறிஞர் பாலு.

* தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை

5-ம் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை

* கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை - சென்னை உயர் நீதிமன்றம்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர பேருந்து நிலையத்திலேயே ரூ.500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

ஆண்டவன் முன் அனைவரும் சமம். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேவலு அமர்வு உத்தரவு.

* கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு.

மார்ச் 31, 2021 வரை வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி - இதனால் அரசுக்கு ஆகும் செலவு ரூ.6 ஆயிரம் கோடி.

5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி.

* மீன்பிடி குறைவு கால நிவாரண தொகையை ரூ.5000 லிருந்து 6000 ஆக உயர்வு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000.

முதற்கட்டமாக திருவள்ளூர் - ராமநாதபுரம் வரை 11 மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

* நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

* தமிழகத்தில்  நீண்ட நாட்களுக்கு பிறகு 1000க்கும் குறைவாக தினசரி தொற்று பாதிப்பு.

இன்று 990 பேருக்கு தொற்று உறுதி; 1,153 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு.

1.20 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 11,309 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

* வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

மனுதாரர்கள் ஆன விஜயகுமார் மற்றும் அகில இந்திய மறவர் நல சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages