அக்னிப்புரட்சி இன்றைய (02.11.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 106.66 ஆகவும், டீசல் விலை மாற்றம் இன்றி ரூ 102.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு
* விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு.
* சென்னையில் இன்று மற்றும் நாளை இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வோரின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை.
* கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
* திண்டுக்கல் : கனமழை காரணமாக கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் விசாகன்
* கன மழை திருவண்ணாமலை, பெரம்பலூர்,மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றுவிடுமுறை.
* கூட்டுறவு வங்கிகளில் 31.03.2021 வரை
5 சவரன்களுக்கு உட்பட்டு கடன் வாங்கியவர்களின் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
* தீபாவளி பண்டிகையின் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு
* தொடர் கன மழை சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர் ராகுல் நாத் உத்தரவு
* தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவிப்பு
* திண்டிவனம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சென்னை சவுகார் பேட்டையைச் சேந்த தீபக் தயாலால் சோனி (43) எடுத்துச் சென்ற 1 கிலோ தங்க நகைகள் பிடிபட்டன
* திண்டுக்கல் அசோக் நகரில் டி.எஸ்.பி. ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.
தூத்துக்குடியில் குற்றப்பிரிவில் பணியாற்றும் ஜெயராமன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்.
* சென்னையில் பலத்த மழை காரணமாக தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து விபத்து.
வேரோடு மரம் விழுந்த விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு; காவலர் ஒருவர் பலத்த காயமடைந்ததாக தகவல்.
* வேலூர் மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
முகாமில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
* 14 மாநிலங்களில் உள்ள 30 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்:
மேற்கு வங்கத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் முன்னிலை; அசாமில் உள்ள 5 தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை.
பீகாரில் உள்ள 2 தொகுதிகளில் ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி தலா ஒரு இடங்களில் முன்னிலை.
இமாச்சலில் 3 தொகுதிகளில் இரண்டில் காங்கிரசும், ஒரு தொகுதியில் ஆளும் பாஜகவும் முன்னிலை.
கர்நாடகாவில் உள்ள 2 தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் முன்னிலை.
ராஜஸ்தானில் உள்ள 2 இடங்களில் காங்கிரசும், மத்தியப்பிரதேசத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை
* முல்லை பெரியாறு - நவ.9ல் அதிமுக போராட்டம்:
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.
நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.
* அதிமுகவின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு பொதுமக்களுக்கு வி.கே சசிகலா தீபாவளி வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
* திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு - வானிலை மையம்
* சென்னை, தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காவலரின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி.
* சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து இறந்த காவலர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி:
ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்த நிலையில் மேலும் ரூ.15 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
காயமடைந்த காவலர் முருகன், தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.
* அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை மீண்டும் வழங்கப்படும்.
முனைவர் பட்டம் பயிலும் பணியாளர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை, பட்டப்படிப்பு பயின்றால் ரூ.20,000 ஊக்கத்தொகை-அரசாணை வெளியீடு.
* SKM குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிப்பு
மேலும் கணக்கில் வராத 3.3 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் - வருமான வரித்துறை நடவடிக்கை
SQUID GAME பெயரில் Crypto Currency மோசடி
SQUID GAME Token என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு 1 Crypto Currency 2850 டாலர்களுக்கு மேல் வணிகம் நடைபெற்ற சமயத்தில் திடீரென வாங்கப்பட்ட Crypto Currency விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது
இதனால் இதில் முதலீடு செய்த பலர் பணத்தை இழந்தனர்
* அமரீந்தர் புதிய கட்சி - பஞ்சாப் லோக் காங்கிரஸ்:
காங்கிரஸில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்கினார்.
தனது புதிய கட்சிக்கு 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என பெயர் சூட்டினார் அமரீந்தர் சிங்.
* புதுச்சேரியில் நவம்பர் 5 , 6 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5,6 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,2,3 தேதிகள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நவம்பர் 5 , 6 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
* வரும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தப்படும்.
இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு உள்ளிட்டவை நேரடியாக நடத்தப்படும்.
Internal, Practical, Viva-Vorce உள்ளிட்ட தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும். - அண்ணா பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment