அக்னிப்புரட்சி இன்றைய (03.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 106.66 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ 102.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
* 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:
தொடர் மழை காரணமாக இன்று கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
* கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” - மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவிப்பு
* விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று (03.11.2021)ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு
* அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர்,மயிலாடுதுறை, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
* கனமழை: நாகை, நாமக்கல், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
* 12 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர்கள்.
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 11மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* கனமழை: சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர்.
* கனமழை:திருச்சி,திருவாரூர்,வேலூர், கள்ளக்குறிச்சிமாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
* தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
* கனமழை: கருர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர்.
* ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு.
* வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.
* மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை:
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு, குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* 10.5% இடஒதுக்கீடு - மேல்முறையீடு செய்யப்படும்:
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் - அமைச்சர் பொன்முடி.
உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் பொன்முடி.
* காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை:
இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிக கனமழை- டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.
டெல்டா மற்றும் கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
* 100 வருடங்களில் இந்தியாவுக்கு பல சவால்கள்:
தடுப்பூசி செலுத்தும் பணியில் 20, 25 பேர் குழுக்களாக சேர்ந்து பணியாற்றலாம் - பிரதமர் மோடி.
வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தலாம் - முதல்வர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்.
* டிச.8 ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு.
ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
* தமிழகத்தில் நவ. 6 ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.
தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமையன்று விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
* கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக அங்கீகாரம்.
கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார மையம் ஒப்புதல்.
கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க இனி சிக்கல் இல்லை.
* பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல்:
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது திடீர் தாக்குதல்.
விமானத்தில் இருந்து இறங்கியது முதலே விஜய் சேதுபதியுடன் சண்டையிட்டு வந்ததாக தகவல்.
தாக்குதல் நடத்திய இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர். பெங்களூரு விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
* பெட்ரோல் - டீசல் வரி குறைப்பு
பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் வரி குறைப்பு
வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு
* சாலைகளில் பள்ளம் இருந்தால் 1913, 044-25619206 என்ற எண்களில் தகவல் தரலாம் - பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராக பணியாற்றுவார் என அறிவிப்பு.
No comments:
Post a Comment