அக்னிப்புரட்சி இன்றைய (05.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ.
நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 18 ஆண்டுகள் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ அறிவிப்பு.
* புதுச்சேரி அருகே சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடித்து தந்தை, மகன் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள்……
* உத்தரகாண்ட்டின் கேதர்நாத் சிவன் கோயிலில் வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி.
கேதர்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தரகாண்டில் ரூ 310 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.
* தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
நாளை நடைபெறவிருந்த 8 வது மெகா தடுப்பூசி முகாம் ரத்து.
தொடர் விடுமுறை மற்றும் மழை காரணமாக மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு.
மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நவ.14ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
* தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
* இரண்டே நாட்களில் டாஸ்மாக் கடை 431.03 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!
தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 ஆம் தேதி ₹205.61 கோடிக்கும், 4 ஆம் தேதி ₹225.42 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்.
* N90 எனப்படும் நட்சத்திரங்கள் உருவாகும் விண்வெளிப் பகுதியில், நீல நிறத்தில் புதிதாக உருவான நட்சத்திரங்களின் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
* விராச்சிலையில் நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த உத்தரவு.
புதுக்கோட்டை: தீபாவளியை முன்னிட்டு விராச்சிலையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு 90 பேர் படுகாயம்.
மஞ்சுவிரட்டு போட்டியை உடனடியாக நிறுத்த வட்டாட்சியர் உத்தரவு.
* திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
* கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஒன்றரை வருடங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவு
* முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓ பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை.
80 வயதிலும் நான் நேரில்சென்று ஆய்வு செய்துள்ளேன்- அமைச்சர் துரைமுருகன்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணையை யாரும் வந்து ஆய்வு செய்ததில்லை.
கேரள அரசும் - தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும்.
பிரனாயி விஜயன் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்- அமைச்சர் துரைமுருகன்.
* சமயல் எண்ணெய் விலை குறைகிறது:
சமையல் எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துவந்த நிலையில், சுங்க வரியை நீக்கியது மத்திய அரசு.
பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா பீன் எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
* கார்த்திகை தீபத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை:
கொரோனா காரணமாக திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.
வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
நவம்பர் 7ஆம் தேதி முதல் 17 தேதி வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியும்.
மகா தீபம் ஏற்றும் திருவிழா நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
* ஆர்யன் கான் கைதான கப்பல் போதைப்பொருள் வழக்கின் விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து சமீர் வான்கடே நீக்கம்.
விசாரணை அதிகாரி சமீர் வான்கடே மீது லஞ்சம் கேட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கு விசாரணையிலிருந்து அவரை நீக்குவதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமையகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிப்பு.
* டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
No comments:
Post a Comment