அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக இதுவரை 33 பேர் கைது

1544 பேர் மீது 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணொளிகளை பார்த்து மேலும் வழக்குகள் பதியப்படும். -தென்மண்டல காவல்துறை

* கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் 25 திரைப்படங்கள் உள்ளிட்ட 45 படங்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 20-ஆம் தேதி முதல், 28-ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.

* இலவச உணவு தானியம் திட்டம் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு.

இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது; வெளிச்சந்தையில் புழக்கம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம்.

* தமிழகத்தில் கடல் பாசி திட்டம்:
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டம் கொண்டு வரப்படும்.

மீனவ பெண்களின் வேலைவாய்ப்புக்கு இத்திட்டம் உந்து சக்தியாக இருக்கும் - இணையமைச்சர் எல்.முருகன்.

* அதிமுக மீது குற்றச்சாட்டு - ஓபிஎஸ் கண்டனம்:

முல்லை பெரியாறு பிரச்சினையில் அதிமுகவை குறை கூறுவதா? - ஓபிஎஸ் கண்டனம்.

நதிநீர் உரிமையை நிலைநாட்டிய அதிமுகவை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது - ஓபிஎஸ்.

* நவ.09ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

இதன் காரணமாக, வட தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கும் வாய்ப்பு.

நவ.09,10 தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.10-12 தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.11,12 ஆம் தேதிகளில் தமிழக கடலோர பகுதி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்-வானிலை ஆய்வு மையம்.

* வட கிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை.

* 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

* மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீ: 11 பேர் பலி.

மஹாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது.

தீயில் சிக்கியும், மூச்சு திணறியும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் கோவிட் நோயாளிகளும் அடக்கம்.

25 பேர் காயமடைந்துள்ளனர்; அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

* சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நோய் தடுப்பு, வெள்ள அபாயம், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உணவு வழங்குவது குறித்து காணொலிக் காட்சி மூலம் துறை செயலர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

* கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம்.

முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி.

பேபி அணை, மண் அணையை வலுப்படுத்த இது மிகவும் முக்கியமானது - ஸ்டாலின்.

* 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்:
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்- தமிழகஅரசு.

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இடமாற்றம்; தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.

தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம்.

போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்; குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்.

பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்; நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages