அக்னிப்புரட்சி இன்றைய (07.11.221) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.11.221) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.11.221) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் விடிய விடிய விடாது கொட்டித்தீர்க்கும் கனமழை.

முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.

பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

சென்னை அருகேயுள்ள புழல் ஏரியில் இன்று காலை 11 மணிக்கு விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறப்பு;

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே வெளியேறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல், உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும்.

* சென்னைக்கு ரெட் அலர்ட்.

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி

1913,  04425619206,  04425619207
04425619208

9445477205  எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

* சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது; மழை நின்றால் மட்டுமே நீரை வெளியேற்றும் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும், அதற்கான பணியில் மாநகராட்சி தயாராக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

* 2015ல் ஏற்பட்டது போன்ற சூழல் தற்போது இல்லை; ஏரிகளில் நீரின் அளவை கண்காணித்து தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மழை பாதிப்பை சீர்செய்ய அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* வட சென்னையின் நட்சத்திர தொகுதியாக இருந்த ஆர்.கே.நகரில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால் செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்மணி!

இடம்: ஆர்.கே.நகர், சிவாஜி நகர்.

* சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து வரும் மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன

விடிய விடிய மழை: வேளச்சேரியில் சாலைகளே தெரியாத அளவுக்கு தேங்கிய தண்ணீர்

* 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு:

கனமழை எதிரொலி : திருவள்ளுர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

* சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.

அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு , தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரும் முதல்வர் உடன் ஆய்வு.

* டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது- பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு.

* கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் - திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வரும் தனது காரில் செல்லாமல் மகேந்திரா ஜீப்பில் வந்து எழும்பூர் மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.

* சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாக திறந்துவைக்க வேண்டும்- பள்ளி கல்வித்துறை உத்தரவு.

பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும்; கணினி உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

* செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக 500 கனஅடி உபரிநீர் திறப்பு.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,590 கனஅடியாக உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.

* சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தம்.

பேசின் பாலத்தை தொட்டு அபாயகரமான அளவுக்கு தண்ணீர் உள்ளதால் ரயில்கள் நிறுத்தம்.

* சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்து இரண்டு நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை -முதல்வர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை  வழங்க உத்தரவிட்டுள்ளேன். சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, தீணையப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு:

சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன்.

எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தேன்; இன்று மாலை சென்னையின் தென் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளேன்.

சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை திரும்புபவர்கள் பயணத்தை 2 நாட்களுக்கு தள்ளி வைக்க முதலமைச்சர் கோரிக்கை.

வெளியூரில் இருந்து சென்னை திரும்புவர்கள் இரண்டு நாட்கள் கழித்து பயணத்தை திட்டமிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

* தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதை தாமதிக்க வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

மழையால் சென்னை தத்தளிப்பதை கருத்தில் கொண்டு விடுமுறையை அரசு நீட்டிக்க வேண்டும் -அன்புமணி.

* தமிழக அரசின் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டதோ -அதிமுக கேள்வி

ஓரிரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ.

அதிமுக அரசின் முன்னெச்சரிக்கை பணிகளை திமுக அரசு முன் மாதிரியாக கொள்ள வேண்டும் -அதிமுக.

* சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தம்

பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் நிறுத்தம்

* தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை மையம்

* சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்.

ரிப்பன் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

* முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழே 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறுவதாக கேரள வனத்துறை அமைச்சர் அறிவிப்பு

அனுமதி வழங்கிய வனத்துறை அலுவலர்களால் தவறு நடந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

நேற்று மரங்களை வெட்ட அனுமதி வழங்கியதற்கு கேரள அரசுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்த நிலையில் இன்று அனுமதி திரும்பப் பெறப்பட்டதாக கேரள வனத்துறை அமைச்சர் தகவல்

* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரிப்பு.

* கனமழை: புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை

* சென்னையில் கனமழை: மழை நீரில் எதிரொலிக்கும் ரிப்பன் மாளிகை

* சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உதயநிதி ஸ்டாலின் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார்

* சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.

* தனது பயணத்தின் போது, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திட்டமிடுமாறு ஆளுநர் அறிவுறுத்தல்.

ஆளுநர் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு பாதிக்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

* நியூசிலாந்து வெற்றி; இந்தியா வெளியேற்றம்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிமையாக ஆப்கானிஸ்தான் அணியை வென்றது.

இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

* சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று தாமதமாக புறப்படும் ரயில்கள்

ஆழப்புழா ரயில் தாமதமாக இரவு 12.30க்கு புறப்படும்; மேட்டுப்பாளையம் ரயில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் 

டெல்லி ரயில் மாலை 6.50க்கு பதிலாக தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்படும்

💥தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* மீண்டும் கனமழை
சென்னை சுற்றுவட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது

* தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய நிலவரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். வெள்ள நிவாரணம் , மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும்.
- பிரதமர் மோடி ட்வீட்

* சென்னையிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை சென்னையில் கனமழை தொடர்வதால் விடுமுறை - தமிழ்நாடு அரசு.

தனியார் நிறுவனங்களும் சூழலை கருத்தில்கொண்டு விடுமுறை அளிக்க முன் வரவேண்டும் (அ) ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு.

* ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் நாளை சென்னை மாவட்டத்தில் இயங்கும் - தமிழ்நாடு அரசு.

* சென்னையில்....! தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவுரை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages