அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2021)
முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆக்ய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
* 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!(Orange Alert) எச்சரிக்கை!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை,சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
* கோவையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக உப்பிலிபாளையம் காவலர் சமூக கூடத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் சுற்றுசுவர் சேதம்.
உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே பாலம் ஆகியவற்றின் கீழ் தண்ணீர் தேங்கியுள்ளது
* வெள்ள அபாய எச்சரிக்கை.
விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை.
* 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்
குறைந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்து வட தமிழகம் நோக்கி நகர கூடும்
வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு
* டெல்டாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு: - சென்னை வானிலை ஆய்வு மையம்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும்.
திருவாரூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.
* சென்னையில் 2-வது நாளாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை மேற்கொண்டார்.
* சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியீடு.
2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரானதால் தமிழக அரசு அரசாணை.
* குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்குகள் முடித்து வைப்பு.
* சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு.
மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.
* பழனி முருகன் கோயிலில் நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் 10ம் தேதி நடக்க உள்ள திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
Palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் நிகழ்ச்சிகளை நேரலையாக காணலாம் - கோயில் நிர்வாகம்.
* கடலூர் மாவட்டத்தில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 2 நாட்கள் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் திட்டமிடாத காரணத்தால் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
தமிழக அரசு முறையான எற்பாடுகளை செய்யாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் காலத்தில் அம்மா உணவுகத்தை செயல்பட விடாமல் திமுக அரசு தவிர்த்து வருகிறது – ஈபிஎஸ்
* திருச்சி முக்கொம்புவிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ள அபாயத்தை தடுக்க கொள்ளிடத்தில் விநாடிக்கு 10ஆயிரம் கன அடி நீர் திறப்பு.
கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
* அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்னேரியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்.
* பருவமழை கண்காணிப்பு - ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்:
சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் - சென்னை
ஜெயந்த் முரளி - காஞ்சிபுரம்
கபில் குமார் - விழுப்புரம்
வன்னியப் பெருமாள் - கோவை
அம்ரேஷ் புஜாரி - வேலூர்
பருவமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள மேலும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
செங்கல்பட்டு - அமுதா,
சென்னை தெற்கு - கோபால்,
சென்னை வடக்கு - கார்த்திகேயன், சென்னை மத்திய மண்டலம் - பங்கஜ் குமார் ஆகியோர் நியமனம்.
* தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் / செயலராக ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகார்வோர் பாதுகாப்பு செயலராக ராஜாராமன் ஐ.ஏ.எஸ் நியமனம்.
சென்னை மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்.
தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக பத்மஜா ஐ.ஏ.எஸ் நியமனம்.
மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்.
தமிழக ஜவுளிதுறை ஆணையராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் நியமனம்.
கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்.
* கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் 12ம் தேதி வரை, காலை 05:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயங்கும்; 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்- சென்னை மெட்ரோ.
* கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09.11.2021) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* டி20 உலகக்கோப்பை தொடர் - நமிபியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
அரையிறுதிக்கு தகுதி பெறாததால் தாய்நாடு திரும்புகிறது இந்திய அணி.
* கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.11.2021) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தர கோபால ராஜ் அறிவிப்பு
No comments:
Post a Comment