அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2021) முக்கிய செய்திகள்.
* மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறப்பு.
அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்த நிலையில் காலை 5 மணிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தற்போது படிப்படியாக 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை 10 அடி உயர்ந்துள்ளது.
* மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து 1,000-ல் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு
உபரிநீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
* தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் - வானிலை மையம்
* கோவேக்சினுக்கு பிரிட்டன் அனுமதி!
நவ. 22 முதல் இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து பிரிட்டன் அரசு அறிவிப்பு
* சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
மருத்துவ முகாம்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.
நீர் நிலைகளை ஆய்வு செய்து, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தல்.
* சென்னை: தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறையாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* உருவானது காற்றழுத்த தாழ்வு:
வங்க கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 11ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக புதுச்சேரி - கடலூர் இடையே கேரளா செல்லும்.
இது புயலாக மாற வாய்ப்பில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
கடந்த 2015 வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.
ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை.
* முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்த ராஜ் கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி. ரமேஷின் காவல் நவம்பர் 22வரை நீட்டிப்பு. காவலை நீட்டித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு.
2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா 2 வது நாளாக குடியரசு தலைவர் மாளிகையில் தொடங்கியது.
* டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் 2ஆம் நாளாக பத்ம விருதுகளை வழங்கி வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
தமிழ்நாட்டிலிருந்து...
மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் ( பத்ம விபூஷன் ) அவருக்கு பதிலாக அவரின் மகன் பெற்றுகொள்வார்.
முன்னாள் இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை. (பத்ம ஸ்ரீ)
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (பத்ம ஸ்ரீ)
இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்த பாப்பம்மாள் (பத்ம ஸ்ரீ)
கலை பிரிவில் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் (பத்ம ஸ்ரீ)
மறைந்த கே.சி சிவசங்கர் (பத்ம ஸ்ரீ) (கலை பிரிவு)
சமூக செயற்பாட்டாளர் மராச்சி சுப்புராமன் (பத்ம ஸ்ரீ)
மறைந்த பி.சுப்பிரமணியம் (பத்ம ஸ்ரீ) (வர்த்தகம் மற்றும் தொழில்பிரிவு)
மறைந்த திருவேங்கடம் வீரராகவன் (பத்ம ஸ்ரீ) (மருத்துவம்)
ஸ்ரீதர் வேம்பு (பத்ம ஸ்ரீ) (வர்த்தகம் மற்றும் தொழில்)
சுப்பு ஆறுமுகம்
ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து விருதுகளை பெறுகின்றனர்.
* குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனக்கே உரிய பாணியில் ஆசி வழங்கிய திருநங்கை கலைஞர்!
கர்நாடகாவைச் சேர்ந்த திருநங்கை நாட்டுப்புற நடனக் கலைஞர் மாதா பி மஞ்சம்மா ஜோகதி பத்மஸ்ரீ விருது பெற்ற போது...
* ரேடார்கள் இயக்கம் குறித்து சந்தேகம் வேண்டாம்:
20 ஆண்டுகளாக ரேடார்கள் இயங்கி வருவதால் ஏற்பட்ட தேய்மானம் காரணமாக சிறு பழுது ஏற்பட்டது.
வானிலை குறித்து தகவல் தரும் 4 ரேடார்களும் தற்போது இயங்கி வருகின்றன.
எங்கள் குழு தொடர்ந்து இயங்கி வருகிறது.
ரேடார்களின் இயக்கம் குறித்து சந்தேகம் வேண்டாம் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்.
* அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
* புதுச்சேரி - மேலும் 2 நாட்கள் விடுமுறை.
கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை.
10 மற்றும் 11 ம் தேதி ஆகிய 2 தினங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 10) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தால், தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு சட்டம் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது - தமிழக அரசு.
* வன்னியர் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.!
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்னும் தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்யவில்லை. விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.!
- பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு
* புதுச்சேரியில் கனமழை தொடர்வதால் நோணாங்குப்பம் படகு இல்லம், பாரடைஸ் கடற்கரை, ஈடன் கார்டன் கடற்கரைகள் மூடப்பட்டன; சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
* திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு
* தொடர் கனமழையால் நாகை மாவட்டத்திலும் நாளை (நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* தொடர் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.10) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* கனமழை காரணமாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
* வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.
தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு.
* தஞ்சையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( நவம்பர் 10 ) விடுமுறை அறிவிப்பு.
* சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
* டி20 கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்
நியூசி.க்கு எதிரான அணி அறிவிப்பு - ரோஹித், ராகுல், ஆர் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ் ஐயர், சாஹல், அஸ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், சிராஜ்.
* நாளை கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நாளை விருதுநகர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ராமநாதபுரம் மற்றும் திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ.10 மற்றும் நவ.11 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை
* முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பாலகுருசாமி மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேடல் குழு ஒருங்கிணைப்பாளராக நியமனம்
No comments:
Post a Comment