அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2021) முக்கிய செய்திகள்.

* வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

* அண்ணாமலைப் பல்கலை 2 நாட்கள் விடுமுறை:
கடலூர்: கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு 10.11.2021 இன்றும் 11.11.2021 நாளையும் விடுமுறை.

பல்கலைக்கழக அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.- பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன்.

* கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு.
அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியீடு.

* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது:
அந்தமான் பகுதிகளில் வரும் 13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிய 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு.

* கனமழையால் முழுக் கொள்ளளவான
71 அடியை எட்டிய வைகை அணை.
வைகை அணைக்கு வரும் 3,000 கனஅடி
நீர் 7 மதகுகள் வழியாக வெளியேற்றம்.
பாசன கால்வாய் வழியாக வைகை அணையில் நீர் திறப்பு.

மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஐந்து  மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம்- மாவட்ட நிர்வாகம்.

* சென்னையில் கனமழையை எதிர்கொள்ள தயார் - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி:

இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரம்.

வெள்ளம் வடியாத இடங்களில் விரைவில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை.

அதிகமான இடங்களில் படகுகளை தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறோம்.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.

ராட்சத மோட்டார்களை கூடுதலாக
பயன்படுத்தவும் நடவடிக்கை.

*:சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

* காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே கரையை கடக்கும்.

வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது நாளை (நவ.11)  கடலூரையொட்டி கரையைக் கடக்கும்-வானிலை ஆய்வு மையம்.

* மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது குணமடைந்து வருகிறேன். -நடிகர் ரஜினிகாந்த்.

புனித் ராஜ்குமார் இறந்த செய்தி எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிந்தது.

என் கண் முன்னாள் வளர்ந்த குழந்தை அவர். பெயர் புகழ் என கன்னட சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.

அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்-நடிகர் ரஜினிகாந்த்.

* 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு நாளை காலை முதல் 30 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால்-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். - தென்மண்டல வானிலை மைய  தலைவர் பாலச்சந்திரன்

* தப்பியது கடலூர், சிக்கியது சென்னை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை திரும்பியது. காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

* தகுதியின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும்.
பணி நியமனங்களை பெற்று தருவதாக கூறும் நபர்களை நம்ப வேண்டாம். - சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர்.

* அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

3 ஆண்டுகாலத்துக்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை ( நவம்பர் 11 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

* இன்று இரவில் இருந்து நாளை வரை பொது மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.

இது நாளை மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.

* வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை நாளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆட்சியர் ராகுல்நாத் எச்சரிக்கை.

* சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்குமென்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையோ அதி கனமழையும் பெய்யும். டெல்டா, கடலூர் மாவட்டங்களில் மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்.

* சேலம் மாவட்டத்தில் நாளை(11.11.2021) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் கார்மேகம்  அறிவிப்பு.

* முக்கிய அறிவிப்பு:
விழுப்புரம் தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மறறும் கல்லூரிகளுக்கும் நாளை 11.11.2021 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கைப்படுகிறது -மாவட்ட ஆட்சியர் மோகன்

* கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (11.11.2021) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

* டி20 உலக கோப்பை கிரிக்கெட்:  பைனலுக்கு  நியூசிலாந்து  தகுதி.
உலகக் கோப்பை டி20 முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி.

* வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

* ⚠️ 🔴திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளார் நடேச தமிழார்வன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை 🔴

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages