அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னை மாநகர் முழுவதும் பரவலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்யும் மழை. நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாம்பரம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின்தடை எனத் தகவல்!
* தி.நகர் முதல் அசோக் பில்லர் கோயம்பேடு வரை பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது.
சென்னை துரைசாமி மேம்பாலம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று (நவ.11) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
* சென்னையில் விடிய விடிய தொடரும் கனமழை
நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை நிலவரம்
அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவு
நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவு
தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது
* சென்னையில் 11 சுரங்கபாதைகள் முடல். துரைசாமி, மேட்லி, வியாசர்பாடி, கணேசபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்டவை மழை நீர் தேக்கம் காரணமாக மூடல்
சென்னையில் கனமழை: 11 சுரங்கப்பாதைகள் மூடல்:
வியாசர்பாடி சுரங்கப்பாதை.
கணேஷ்புரம் சுரங்கப்பாதை.
திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதை.
கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை.
மேட்லி சுரங்கப்பாதை.
துரைசாமி சுரங்கப்பாதை.
பழவந்தாங்கல் சுரங்கப்பாதை.
தாம்பரம் சுரங்கப்பாதை.
அரங்கநாதன் சுரங்கப்பாதை.
வில்லிவாக்கம் சுரங்கப்பாதை.
கக்கன் சுரங்கப்பாதை.
* அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும்.
விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.
* சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
* திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து 8,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம். கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னையில் பலத்த மழை எதிரொலி மதுரை, திருச்சி மும்பை, ஷார்ஸஜா, துபாய் உட்பட 14 விமானங்கள் ரத்து; 6 பன்னாட்டு விமான நேரங்கள் மாற்றம்
* சென்னையில் தொடரும் மழை காரணமாக 7 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்:
மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடைபெற்றுள்ளது.
கே , கே நகர் - ராஜ மன்னார் சாலை.
மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை.
ஈ வி ஆர் சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை.
செம்பியம் - ஜவஹர் நகர்.
பெரவள்ளுர் - 70 அடி சாலை.
புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு
வியாசர்பாடி - முல்லை நகர் பாலம்.
* கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தம்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையில் ஞாயிறு கால அட்டைவணைப்படி மின்சார ரயில் இயக்கம்
* சென்னை நகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது
சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
* மழை பாதிப்பு : முதலமைச்சர் ஆலோசனை.
வடகிழக்கு பருவமழை தீவிரமைடைந்துள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெரும் ஆலோசனையில் தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
வெள்ள பாதிப்புகள் குறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.
* வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கடலூர் செல்லவுள்ளார்.
தொடர்ந்து 2 நாள்கள் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தவுள்ளார்.
சென்னை வேளச்சேரி மழையில் மிதக்கும் நிலையில் அங்குள்ள மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியுள்ள மக்கள்
* மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
* தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும்:
அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - முதல்வர்
* சென்னை தாம்பரத்திற்கு அருகே உள்ள முடிச்சூர், வரதராஜபுரம் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
வீடுகளில் சிக்கியவர்களை படகுகள் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்கும் பணியில் தீவிரம்
" சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை நீடிப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 12) விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
* கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (நவ.12) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
* உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை தோலில் தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றி பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி……
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார்.
தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்த போது அவர் உடலில் அசைவு இருந்து உள்ளது.
சிறிதும் தாமதிக்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் உதயாவை தனது தோலில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.
அங்கு உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை நெகிழச்சிய ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
* சென்னையில் பல்வேறு இடங்களில் மிககனமழை
அண்ணா நகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி , சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, தரமணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிககனமழை
" கனமழையின் காரணமாக சென்னையின் சில
சுரங்கப்பாதைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுரங்கப் பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
* கனமழை காரணமாக சென்னை (Central) - திருவள்ளூர் இடையே மின் தொடரி சேவை நிறுத்தம்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையில் ஞாயிறு கால அட்டைவணைப்படி மின்- ரயில்கள் இயக்கம்
* திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-45கி.மீ வேகத்தில் வீசும்.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு.
* தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 54% அதிகம் பொழிந்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 77% அதிகமாக பொழிந்துள்ளது.
* பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை எந்த விமானங்களும் தரை இறங்காது என அறிவிப்பு
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் சேவையில் மாற்றம் இல்லை - விமானநிலைய நிர்வாகம்
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,646க்கும், சவரன் ரூ.37,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* காற்றழுத்த தாழ்வு மையம் கரையை கடக்க தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்டை' விலக்கிக் கொள்வதாக அறிவித்தது வானிலை ஆய்வு மையம்!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும்.
* புதுச்சேரியில் நாளை பள்ளி-கல்லூரிகள் இயங்கும்.
புதுச்சேரியில் நாளை பள்ளிகள் விடுமுறை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை- கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
இரண்டு நாட்கள் மழை இல்லாத காரணத்தால் பள்ளி- கல்லூரிகள் செயல்படும்.
* பயிர் காப்பீடு செய்வதற்கான
இ-சேவை மையங்கள் நவ.13,14ஆம் தேதிகளில் இயங்கும் என அறிவிப்பு.
* தொடர் மழையின் காரணமாக நாளை ( 12.11.2021) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.
* கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.12) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
* தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
* தொடர் கனமழையால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (நவ 12) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
* தொடர் கனமழையால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (நவ 12) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
* நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* வெளியேறியது பாகிஸ்தான்; பைனலில் ஆஸ்திரேலியா.
டி20 உலகக்கோப்பை 2வது அரையிறுதி; பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
வரும் 14ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை.
No comments:
Post a Comment