அக்னிப்புரட்சி இன்றைய (12.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் கட்ட 15 நாட்கள் அவகாசம்-மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 15 நாட்கள் அவகாசம்.
* தருமபுரி அருகே கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.
கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டது.
ரயில் தடம்புரண்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ரயில் தடம் புரண்டதால் சேலம் தருபுரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு.
* தாம்பரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
* சென்னை கோட்டூர்புரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆய்வு.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆய்வு.
* தஞ்சாவூரில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை:
ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
* வெள்ள பாதிப்பு விஷயங்களில் தலையிட ஐகோர்ட் மறுப்பு:
சென்னையில் மழை வெள்ள பாதிப்பை சரி செய்ய தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது - சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்ற முறையீடு நிராகரிப்பு.
* ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர்:
மயங்கி விழுந்த நபரை தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு.
* காய்கறிகளின் விலையை குறைக்கவும் நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் -வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
தொடர் மழை காரணமாக சென்னையில் உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையை குறைக்கவும், நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்த திட்டம்- வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சென்னை தலைமை செயலகத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடர் மழை காரணமாக மாநிலம் முழுவதும் 6000 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் வெள்ளத்தில் மிதப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
* நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி -வானிலை மையம்
வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் -வானிலை மையம்.
இதனால் தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்
* நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கேப்டனாக ரஹானே செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அஜிங்கே ரஹானே (C), புஜாரா (துணை கேப்டன் ), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ்.பரத், ஜடேஜா, ரவி அஸ்வின், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசாத் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கேப்டன் விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைந்து கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தோளில் சுமந்து ஓடியும் பயனில்லை; உயிரிழந்த கல்லறை ஊழியர்.
ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்ட உதயகுமார் சிகிச்சை பலனின்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
* புதுச்சேரியில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000, பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5000 நிவாரணம் -புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
* 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும்- உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம்.
* அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.
அதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால்தான், கனமழை வந்தபோதும் குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்தான் காரணம் என்ற முதல்வரின் குற்றச்சாட்டு பொய்யானது.
‘ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்பட்டது என்று மத்திய அரசே பாராட்டு தெரிவித்து உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தலைமைறைவாக இருந்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* நவ.,16 வரை நீலகிரி போகாதீங்க; நிலச்சரிவு அபாயத்தால் எச்சரிக்கை.
நவ.,16 வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நவ.,12 முதல் 16ம் தேதி வரையிலான 5 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யும் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்துக்கு கடிதம்
* செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
* கனமழை பாதிப்பையடுத்து நாளை( 13-11-2021) சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
* நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
* தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோருக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்புத் திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் அரசு வேலையில் இட ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.
* பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம்.
26 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நவ 30 வரை நீட்டிக்க கோரி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம்.
No comments:
Post a Comment