அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2021) முக்கிய செய்திகள்.

*:சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* முல்லை பெரியாறு - தமிழக அரசு விளக்கம்:

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் பதில் மனுவுக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனுத்தாக்கல்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை அளித்து மிகைப்படுத்தி வருகிறது.

முல்லை பெரியாறு அணை பலவீனமானது என ஐ.நா அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவது தவறானது: முல்லை பெரியாறு குறித்து ஐநா அறிக்கை வெளியிடவில்லை.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது - தமிழக அரசு.

* மாணவி தற்கொலை - ஆசிரியர் கைது;

கோவை: உக்கடம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை அளித்த‌தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் கைது.

* மழை வெள்ளம் - முதல்வர் நேரில் ஆய்வு:

கடலூர்: அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

* முல்லைப்பெரியாறு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்; முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

* தங்கம் விலை ரூ 264 உயர்வு:
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 264 அதிகரித்து ரூ 37,240-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ 4,655-க்கு விற்பனை.

* பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தில் (RPMFBY) பதிவு செய்ய 15.11.21 கடைசி நாள் என்ற வகையில்  உழவர்கள் பயன்பெறும் வண்ணம் விடுமுறை நாளான இன்று(13.11.21) வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

* உலகின் மிக மோசமான காற்றின் தரம் கொண்ட நகரம் டெல்லி.

மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் கொண்ட முதல் 10 உலக நகரங்களில் 3 இந்தியாவில் உள்ளது.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த 'IQAir காலநிலை குழு' மதிப்பீடு.

1.டெல்லி, இந்தியா (AQI:556)

2.லாகூர், பாகிஸ்தான் (AQI:354)

3.சோபியா, பல்கேரியா (AQI:178)

4.கொல்கத்தா, இந்தியா (AQI:177)

5.ஜாக்ரெப், குரோஷியா (AQI:173)

6.மும்பை, இந்தியா (AQI:169)

7.பெல்கிரேட், செர்பியா (AQI:165)

8.செங்டு, சீனா (AQI:165)

9.ஸ்கோப்ஜே, வடக்கு மசிடோனியா (AQI:164)

10.கிராகோவ், போலந்து (AQI:160)

* தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் மெகா மருத்துவ முகாம் துவக்கம்:

சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னையில் 750 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைப்பு.

காய்ச்சல், சளி, சரும பிரச்சனை உள்ளிட்டவற்றிற்கு நேரடியாக சிகிச்சை. 1,500 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

* தஞ்சை: 1036வது சதய விழாவை முன்னிட்டு இராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்த மரியாதை.

* 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு. - வானிலை ஆய்வு மையம்.

தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்.

* டெல்லியில் சில அவசர நடவடிக்கைகளை எடுங்கள்:- உச்சநீதிமன்றம்

2 நாட்கள் டெல்லியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பது பற்றி யோசிக்க முடியுமா?- உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி.

காற்று மாசுபாடு என்பது ஒரு தீவிரமான முக்கிய பிரச்சினை.

காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?- உச்சநீதிமன்றம்.

வைக்கோல் எரிக்க சந்தையில் 2-3 வகையான, 2 லட்சம் இயந்திரங்கள் உள்ளன.

ஆனால் விவசாயிகளால் அவற்றை வாங்க இயலாது.

விவசாயிகளுக்கு மத்திய/மாநில அரசுகள் ஏன் இந்த இயந்திரங்களை வழங்கக் கூடாது?- உச்சநீதிமன்றம்.

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு-500ல் இருந்து 200 புள்ளிக்காவது எப்படி குறைக்கலாம்? என்று சொல்லுங்கள்.

டெல்லியில் மக்களால் எப்படி வாழ முடியும்?-உச்சநீதிமன்றம்.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

* குமரி, நெல்லையில் கனமழை நீடிக்கும்:

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

* கன்னியாகுமரியில் கொட்டிதீர்த்த மழை - பெருக்கெடுத்த வெள்ளம்:

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்தனர்.

வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வீட்டிற்குள் மக்கள் தவிப்பு.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினர் குமரி மாவட்டத்திற்கு விரைவு.

* உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.
வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

* குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரத்து:
சென்னை எழும்பூரில் இருந்து நாளை காலை 9 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து - தெற்கு ரயில்வே

நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ரயில் ரத்து

* ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மாணவி தற்கொலை - கோவையில் ஆக்ரோஷ போராட்டம்.

12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.

தனியார் பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை - புகார்.

* போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்த போலீசார்.

ஆசிரியருக்கு உரிய தண்டனை வழங்க
கோரி மாணவர்கள் போராட்டம்

பள்ளி முதல்வர் மீராவை கைது செய்யக் கோரி உறவினர்களும் போராட்டம்.

* மாணவி தற்கொலை - ராமதாஸ் வேதனை

கோவை, தனியார் பள்ளியில் ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் மாணவி தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.

தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பாலியல் குற்றங்களை தடுக்காமல் உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

* நாகை மாவட்டம் அருந்தவபுலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

விளைநிலங்களில் ஏற்பட்ட சேதம் குறித்து விவசாயிகள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

* 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக்குறைவு உள்ளது.

வேலையிழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச்சான்று பெறுவதில் சிக்கல் இருக்கிறது- தலைமை நீதிபதி அமர்வு.

மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா? வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை தெரிவிக்க வேண்டும்-தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

* கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு.

பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தபோதும் பள்ளி முதல்வராக இருந்த மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.

* டெல்டா பகுதிகளில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் பேட்டி:

பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர்களை கண் போல் பாதுகாக்கும் அரசு திமுக அரசு.

ஆட்சிக்கு வந்த உடன் டெல்டா மாவட்டங்களில் 4000கிமீ தூர் வாரப்பட்டது.

இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க  நிரந்தர தீர்வு எடுக்கப்படும்.

இயன்ற அளவிற்கு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பகுதிகளிலும் பயிர் சேதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியின் செயல்படாத தன்மையின் காரணமாகவே சென்னையில் வெள்ள பாதிப்பு.

2015 ல் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்டடதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்க கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கபட்டன.

* கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்.

கோவை மாணவி தற்கொலை:  குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது.

சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது.
பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். முதலமைச்சர் ஸ்டாலின்

* அதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு.

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு வரும் திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும்.

நவம்பர் 14 முதல் 17 வரை டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை-முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி அரசு அதிகாரிகள் ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்; தனியார் அலுவலகங்கள் இதையே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

காற்று மாசு குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

* பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது சமுதாயத்திற்கு கேடானது.

மாணவி மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-விஜயகாந்த், தேமுதிக தலைவர்.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை, சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த  விவரங்களை கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages