அக்னிப்புரட்சி இன்றைய (15.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* என்றும் மக்களுடன் இருந்து மாநிலத்தை காப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாடு முழுவதும் தொலைநோக்கு பார்வையுடனான மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி, நீர் ஆதாரங்களைப் பெருக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும்.
பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.
மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாகக் அரசு திகழும் என்று உறுதியளிக்கிறேன்.
எந்நாளும் மக்களுடனேயே இருப்போம், மாநிலத்தைக் காப்போம்.
இது எனது தலைமையிலான அரசு என்பதைவிட, நமது அரசு என்று குறிப்பிடுவதையே விரும்புகிறேன்.
உங்களால், விரும்பி என்னிடம் வழங்கப்பட்ட ஆட்சியுரிமை. அதனை மறந்திடாமல் மக்கள் பணியாற்றுவது ஒன்றே அரசின் இலக்காகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி பாதையில் நிலச்சரிவு மற்றும் மழை நீர் தேக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
* உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயம் - தமிழ்நாடு அரசு.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளத்தில் பதிவு செய்வோர், ஆதார் எண் மூலம் சேவையை பெறலாம் - தமிழ்நாடு அரசு.
* ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.
ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
* காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் பாதிப்பு குறித்த அறிக்கை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு.
அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழு பயிர் சேதங்களை ஆய்வு செய்த நிலையில், நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.
* ஆன் லைன் மூலம் வகுப்பு நடத்திவிட்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு:
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, செமஸ்டர் தேர்வை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு.
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்.
ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் , நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும்- வேல்ராஜ்.
* ‘ஜெய் பீம்' பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ்.
ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நோட்டீஸ்.
வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் - மனு.
24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - மனுதாரர் எச்சரிக்கை.
* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.
கோவில்களுக்கு அறங்காவலர்கள் இல்லாத நிலையில் இந்து சமய அறிநிலையத் துறையின் சார்பில் புதிதாக கல்லூரிகளை துவங்க இடைக்கால தடை.
ஏற்கனவே துவங்கப்பட்ட கல்லூரிகளின் நிலை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது. வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.- உயர்நீதிமன்றம்
* வெள்ள நீர் தேங்கியுள்ளதை குற்றச்சாட்டாக தெரிவித்தோம். அதற்கு மறுப்பு சொல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சியை மிரட்டும் வகையில் பேசுகிறார்- எடப்பாடி பழனிசாமி.
கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை; சேதங்கள் குறித்து மாநில அரசு உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும், மத்திய அரசை நாங்களும் வலியுறுத்துவோம்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது; அதிமுக ஆட்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்- எடப்பாடி பழனிசாமி.
* நவ.17, 18-ல் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக பலத்த மழை எச்சரிக்கை -வானிலை மையம்.
இன்று (நவ.,15) மற்றும் நாளை ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,17, 18ம் தேதிகளில் சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்- சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
* சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும்:
பொது இடத்தில் ஏற்படும் விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது.
சமச்சீரான இழப்பீடு வழங்கும் வகையில் 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி - திருமாவளவனுக்கு சூர்யா கடிதம்.
கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம்.
உண்மையான சமூக மாற்றங்களை அரசும் அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்.
ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி- வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா கடிதம்.
* குமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு:
குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஆய்வை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* பத்திரிகை துறையினருக்கான பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் அரசாணை.
* விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேன்சி ரக பட்டாசுகள் இருந்த கட்டிடத்தில் விபத்து.
வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் கட்டடம் தரைமட்டம்.
வெடிவிபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி.
கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.
* நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிக்கையை திரும்ப பெற்றது தமிழக அரசு.
ஒப்பந்தப்புள்ளி கோரியதை திரும்பப்பெறுவதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அறிவிப்பாணை.
* தேசிய அறிவியல் திறனறிவு தேர்வை இந்த ஆண்டு மட்டும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.
அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளிலும் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவு.
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றம்.
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி இடமாற்றம்.
தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல்.
No comments:
Post a Comment