அக்னிப்புரட்சி இன்றைய (16.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* கோவையில் உயிரிழந்தது இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காதான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி.
பெயர், முகவரி உள்ளிட்ட போலியான ஆவணங்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து மதுரையில் எரிக்கப்பட்டது.
இலங்கை அரசின் உதவியுடன் அங்கொட லொக்காவின் தாயார் சந்திரிகாவின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
* ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரியாக இருந்த நல்லமநாயுடு காலமானார்.
சென்னை பெரியார் நகரில் உள்ள இல்லத்தில் நெஞ்சுவலியால் நல்லம நாயுடு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 83.
* சென்னை கீழ்பாக்கத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் வின்சென்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.
குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் வின்செண்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
* பயிர் சேதம் - அமைச்சர்கள் குழு அறிக்கை சமர்பிப்பு:
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர சேத பாதிப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்பிப்பு.
ஐ.பெரியசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு தலைமை செயலகத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு.
* 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு மேல் முறையீடு.
10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு.
வன்னியர் 10.5 விழுக்காடு தீர்ப்பை எதிர்த்து பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் தலைவர் ஜிகே மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே இரண்டு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல்..!
* ‘வலிமை' சிமெண்ட் அறிமுகம்:
தமிழக அரசின் மலிவு விலை 'வலிமை' சிமெண்ட்டை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தலைமை செயலகத்தில் வலிமை சிமெண்டை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வலிமை சிமெண்ட். 2 விலைகளில் விற்பனை:
தமிழக அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது - அமைச்சர் தங்கம் தென்னரசு.
‘வலிமை’ சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் ரூ 350 மற்றும் ரூ 365 ஆகிய விலைகளில் கிடைக்கும்.
* மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு:
மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.
மேட்டூர் அணை 120 அடியை எட்டிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு.
* பருவமழை பாதிப்பு - நிவாரணம் அறிவிப்பு:
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை சீரமைக்க ரூ 300 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்.
குறுவை - கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ 20,000 வழங்கப்படும்.
பயிர் மறுசாகுபடிக்கு இடுபொருட்கள் வாங்க ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ 6,038 வழங்கப்படும் - முதல்வர்.
பயிர் சேதம் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நிவாரணம் அறிவிப்பு.
* மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு:
மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது குறித்து தெளிவுப்படுத்த மதுரைகிளை உத்தரவு.
இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருந்தால் அதனை எளிதாக விட்டு விட இயலாது - நீதிபதி.
பிரேத பரிசோதனை அறிக்கையை வரும் 24 ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவு.
* கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
துபாயில் இருந்து மும்பை திரும்பிய போது உரிய ரசீது இல்லாத காரணத்தால் கைப்பற்றியதாக மும்பை சுங்க துறையினர் தகவல்.
* ரூ.5 கோடிக்கு வாட்ச் வாங்கினேனா? ஹர்திக் பாண்ட்யா அதிர்ச்சி.
துபாயில் நான் வாங்கிய வாட்ச்களின் மதிப்பு ரூ.1.5 கோடி தான்ரூ.5 கோடி என பரவும் தகவல் தவறானது.
வரி கட்ட தயாராக இருக்கிறேன், சட்டத்தை மீறவில்லை. மும்பை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா விளக்கம்.
* கடலூர் மாவட்டம் சித்தேரி மற்றும் பூவாலை கிராமங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பார்வையிட்ட பின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
* பூர்வாஞ்சல் விரைவு சாலை திறப்பு:
உத்தரபிரதேசத்தில் ரூ 22,500 கோடி செலவில் அமைக்கப்பட்ட பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
விரைவு சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் வந்திறங்கினார் பிரதமர் மோடி.
லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கிறது பூர்வாஞ்சல் விரைவுச்சாலை.
341 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும்.
* திருப்பதி கோயிலில் பூஜை செய்வதில் சம்பிரதாய முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
"கோயிலில் தேங்காய் உடைப்பது, தீபாராதனை காட்டுவது போன்ற சம்பிரதாய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று தெரிவித்தனர்
* ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிவிழா கொண்டாட்டம்.
வரும் 20-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
* அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வுதான் - உயர்கல்வித்துறை;
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வுதான் நடத்தப்படும் - உயர் கல்வித்துறை அறிவிப்பு.
ஆன்லைனில் தேர்வு நடத்தவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நேரடி தேர்வு மட்டுமே என அறிவிப்பு.
* 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது.
படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.
அந்த வகையில், இந்த திட்டத்தின் மூலம் பாடம் பயின்று வந்த முதியவர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், 104 வயதான குட்டியம்மா என்ற பாட்டி பயின்று வந்துள்ளார்.
கோட்டயம் மாவட்டம் அய்யர் குன்னம் பகுதியைச் சேர்ந்த குட்டியம்மா பாட்டியும் இந்த தேர்வை எழுதியுள்ளார்.
இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், குட்டியம்மா பாட்டி, தேர்வில் 100க்கு 89 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
குட்டியம்மாள் பாட்டி தன் வாழ்நாளில் பள்ளிகூடத்திற்கே செல்லாதவர்.
இவர் வீட்டில் தற்போது படித்து பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று 89 சதவீத மார்க் வாங்கியுள்ளார்.
இந்த தகவல் அம்மாநில கல்வி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சர் சிவன் குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த டிவீட், பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பலர் இது குறித்து பேசி வருகின்றார்.
* தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே பென்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து கார் விபத்து.
கிணற்றுக்குள் விழுந்து உள்ள காருக்குள் தந்தை மற்றும் 1 குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்.
தீயணைப்பு வீரர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன் நிலையில்
கிணற்றுக்குள் விழுந்த கார் வெளியே எடுக்கப்பட்டது - காரில் இருந்த தந்தை, மகள் உயிரிழப்பு
* அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்-குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.
* 19-ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்:
நவம்பர் 19ம் தேதி - வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
கனமழை - வெள்ள பாதிப்புகள், நிவாரணம் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது என தகவல்.
* கோவை மாணவி தற்கொலை விவகாரம்: மாணவியின் அடையாளங்களை வெளியிட்ட 48 யுடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என தகவல்- காவல்துறை.
No comments:
Post a Comment