அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராகிறார் முனிஷ்வர் நாத் பண்டாரி

இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியீடு

* 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்...

சென்னை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்.

* மயான பணியாளர்களை, கொரோனா கால முன்களப்பணியாளர்களாக அறிவித்து அரசு அரசாணை வெளியீடு.

கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் - தமிழகஅரசு அரசாணை வெளியீடு

* மாணவர்களின் கோரிக்கையை ஏற்று
வரும் செமஸ்டரில் மட்டும் நேரடி தேர்வாக நடத்தாமல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும்; மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

* ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்தது உச்சநீதிமன்றம்.

தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும். அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும்.

* பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.

* 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், காரைக்கால் துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை  உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

* உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று இணைய வழியில் (online) தேர்வினை தொடர்ந்து நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

* வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் மதியம் 3 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும்

* 12 இந்திய காவல் பணி அலுவலர்கள் இடமாற்றம் -தமிழ்நாடு அரசு ஆணை

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு:

கோவை மாநகர ஆணையர் தீபக் எம்.தாமோர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஐஜியாக நியமனம்.

திருச்சி எஸ்பியாக மூர்த்திக்கு பதில் சுஜித் குமார் நியமனம் - தமிழக அரசு.

நெல்லை எஸ்பியாக மணிவண்ணனுக்கு பதில் சரவணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

நெல்லை, திருச்சி, வேலூர் எஸ்.பி.க்கள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.

* கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது.

நேற்று வரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்ப்பு.

* பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை - விழுப்புரம் சிறப்பு விரைவு ரயில் பரங்கிப்பேட்டை மற்றும் நீடூர் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே துறை அறிவிப்பு

* விழுப்புரம், மாம்பழபட்டிலிருந்து மல்லிகை பட்டு செல்லும் தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் மூழ்கியதால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது;

கோழிப்பட்டு, பள்ளியந்தூர்,அரியலூர் கிராம மக்கள் பாதிப்பு

* தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் கனமழை காரணமாக சென்னை, வேலூர், திருபத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

* கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(19.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(19.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(19.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

* கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* கனமழை காரணமாக பெரம்பலுர் மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* திருப்பதி - திருமலை இடையேயான போக்குவரத்து நிறுத்தம் .

கனமழை காரணமாக திருப்பதி - திருமலை இடையேயான வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக செல்வதற்கு பயன்படுத்தப்படும் மலை பாதைகளும் கனமழை காரணமாக நேற்று முதல் அடைக்கப்பட்டுள்ளன.

தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* தொடர்மழையின் காரணமாக நாளை (19.11.2021) அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது

* சென்னை - புதுச்சேரி இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும்
சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி

* கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

* சென்னை,திருவள்ளூர் மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறுகிறது- வானிலை ஆய்வு மைய தென் மண்டல  தலைவர் பாலச்சந்தர்.

* கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -மாவட்ட ஆட்சியர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages