அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* பம்பையில் வெள்ளம் - சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.

கேரளா : பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தார் ஆட்சியர் திவ்யா.

மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி.

* பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது சாத்தியமில்லை' என்று தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நவம்பர், 3 முதல், பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் வரியை குறைத்துள்ளது. மத்திய அரசின் வரி குறைப்பாலும், பெட்ரோலின் விலை அடிப்படையில், தமிழகத்தில் வரி விதிப்பதாலும், சில்லரை விலையில் பெட்ரோலுக்கு 65 பைசா; டீசலுக்கு 10 பைசா கூடுதலாக குறையும்.

இதனால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு 1,050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. இது, ஏற்க இயலாத கோரிக்கை.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் முன், லிட்டருக்கு பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 32.90 ரூபாய்; டீசல் மீதான வரி 31.80 ரூபாயாக இருந்தது. இதை முறையே 27.90 ரூபாய்; 21.80 ரூபாயாக மத்திய அரசு குறைத்து உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, பெட்ரோலுக்கு 18.42 ரூபாய்; டீசலுக்கு 18.23 ரூபாயை, மத்திய அரசு இன்னும் கூடுதலாக விதித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை லிட்டருக்கு, பெட்ரோல் மீதான மாநில வரி 21.46 ரூபாய்; டீசல் மீதான வரி, 17.51 ரூபாயாக உள்ளது.

2014ம் ஆண்டில் இருந்ததை விட கூடுதல் வரியை, அ.தி.மு.க., அரசு தான் செலுத்தியது.தி.மு.க., அரசு ஏற்கனவே, பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு, ஆக., 14ல் அமலுக்கு வந்தது. மத்திய அரசு ஏழு ஆண்டுகளாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. இதை மீண்டும், 2014ல் இருந்த அளவுக்கு குறைத்துக் கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்து விடும்.

ஏனெனில் இந்த வரி விதிப்பு, அடிப்படை விலை மற்றும் மத்திய அரசின் வரி விதிப்பின் மீது விதிக்கப்படும் வரி.எனவே, மத்திய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது நியாயமும் அல்ல; சாத்தியமும் அல்ல.

எனவே, 2014 ம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். இதுவே அனைவரும் பயனடையும் எளிமையான, நியாயமான ஒரே தீர்வு. இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்து விடும்.

* சென்னை, மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.

தெருக்களில் நடந்து சென்று பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

* தமிழகத்தில் அம்மா மருந்த‌கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் - எதிர்கட்சி தலைவர் பழனிசாமி.

அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தக‌ங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும் மக்கள் நலனுக்கு எதிரான முடிவை அரசு கைவிட வேண்டும் - ஈபிஎஸ்.

* தமிழகத்தில் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை.

நேரடித்தேர்வு நடத்த 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கினாலும் அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விக்குறியே - விஜயகாந்த்.

* கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

ப‌ம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சீரானதால் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

" கரூர்; வெண்ணைமலை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை என மாணவி, கடித‌த்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தகவல்.

பாலியல் தொல்லையால் சாகும்
கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்" - தற்கொலைக்கு முன் கரூர் மாணவி எழுதிய உருக்கமான கடிதம்.

* தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2 தேசிய விருதுகள்.

சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சாதனை.

5 வது முறையாக தூய்மையான நகரம் என்ற விருதைப் பெற்றது மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம்.

* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர் எம் கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் புல தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் கதிரேசன்.

கதிரேசனை புதிய துணைவேந்தராக நியமித்தது ஆளுநர் ரவி உத்தரவு.

* அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை; மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது

அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126 லிருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம்.

* அம்மா உணவக பெயர் பலகையில் கலைஞர் படம்:

மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-வது சீசனில் கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழா தொடங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை வழங்கினார் மகேந்திர சிங் தோனி.

சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி- தோனி.

எனது முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது, எனது கடைசி போட்டி சென்னையில்தான் என நம்புகிறேன் - தோனி.

சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகமாக கற்று கொடுத்துள்ளது.

மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்களை உற்சாகபடுத்துவார்கள், அதுதான் அவர்களது சிறப்பு- தோனி.

* முதலமைச்சராக மட்டுமல்ல தோனி ரசிகராகவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் - சி.எஸ்.கே. அணி பாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர். சென்னை என்றாலே சூப்பர்தான் மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியோடு பாராட்டு விழாவிற்கு வந்திருக்கின்றேன்

என் மனது இப்போதும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வது என சிந்தித்து கொண்டிருக்கிறது; சற்று இளைப்பாற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.

தமிழர்கள் அனைவரும் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர்.- முதல்வர் மு.க ஸ்டாலின் .

* தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை எனத் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages